விரகத்தியில் தவறான முடிவு எடுத்த தங்கமயில், மீனா செய்த விஷயம், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 16/2/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோர்ட்டில் நீதிபதி, இரண்டு தரப்பு வாதங்களையும் விசாரித்தார். தங்கமயில் சார்பில், சரவணன் குடும்பத்தின் மீது பொய்யான புகார்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள். சரவணன், அவர்கள் சொல்வதெல்லாம் பொய். எனக்கு மயிலுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. தயவு செய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்றார். தங்கமயில் கோர்ட்டிலேயே விவாகரத்து வேண்டாம் என்று கதறி அழுதார். உடனே நீதிபதி, இன்னொரு ஒரு தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து விட்டார்.

கோர்ட்டில் தங்கமயில், தயவு செய்து விவாகரத்து இருக்க வேண்டாம். நாம் சேர்ந்து வாழலாம் என்று கதறி அழுதார். சரவணன், உன்னை விட்டு பிரிந்தால் தான் எனக்கு நிம்மதி. என்னை நிம்மதியாக வாழவிடு என்று கோபப்பட்டார். அப்போது வந்த கோமதி, என் மகனை விட்டுவிடு. அவனுக்கு விவாகரத்து கொடுத்துவிடு என்றார். இதனால் பாக்கியம் கோபப்பட்டு பேசி இருந்தார். அதற்குப்பின் இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. இன்னொரு பக்கம் அரசி வீட்டில் தனியாக இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது மனம் நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பாண்டியன் வீட்டிற்குள் நுழைந்து விட்டார். அவரை பார்த்துவிட்டு அரசி பயந்து போய் கத்தினார். அரசி சத்தத்தை கேட்டு அப்பத்தா, குமார் இருவரும் வந்தார்கள். பின் அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை குமார் துரத்திவிட்டு அரசியை சமாதானம் செய்தார். அதற்குப்பின் சரவணன், அஞ்சலியுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கோமதி பாண்டியனுக்கு சாப்பாடு பரிமாறினார். பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கோமதி கோர்ட்டில் நடந்தது எல்லாம் சொல்லி சரவணன் வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியம், உன்னால் அவர்கள் கை காலில் விழுந்து கெஞ்சி விவாகரத்து வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. எதற்கு இப்படி இருக்கிறாய்? என் உயிரை வாங்காதே,
இங்கிருந்து கிளம்பு. எங்கேயாவது போய் செத்துப் போ என்றெல்லாம் ரொம்ப மோசமாக திட்டி விடுகிறார். இதனால் மனமுடைந்த தங்கமயில் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதற்குப்பின் தங்கமயில் நேராக சரவணன் பார்க்கத்தான் போகிறார். சரவணன், தங்கமயில் சொல்ல வருவதை கூட காதில் கேட்கவில்லை. ரொம்ப கடுமையாக திட்டி அனுப்பி விடுகிறார். தங்கமயில் கடையிலிருந்து வெளியே போவதை அஞ்சலி பார்த்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

சரவணன், அவர் என் மனைவி. சின்ன சண்டை என்று விவாகரத்து விஷயத்தை சொல்லாமல் விடுகிறார்.
பின் மனமுடைந்த தங்கமயில் செத்துவிடலாம் என்று யாரும் இல்லாத இடத்திற்கு போகிறார். அந்த வழியாக வந்த மீனா, தங்கமயிலை பின் தொடர்ந்து போகிறார். பின் தங்கமயில், கிணற்றின் மீது ஏறி நின்று குதிக்கப் போகிறார். உடனே அங்கு வந்த மீனா தடுத்து நிறுத்தி விசாரிக்கிறார். அப்போது தங்கமயில், தன் அம்மா சொன்னதையும் சரவணன் திட்டியதையும் சொல்லி எமோஷனலாக அழுகிறார். பின் மீனா, தங்கமயிலை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள் .

behindtalkies AMP · Quick view
View full