உண்மை அறிந்து சுகன்யாவை வெளுத்து வாங்கும் மீனா, வேதனையில் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 5/6/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமார், மீண்டும் அரசியை மிரட்டி அடிக்க போனார். அந்த இடத்தில் இருந்து அரசி விலகி விட்டதால் சுவர்மிது பட்டு குமார் கையில் அடிபட்டது. உடனே வலி தாங்க முடியாமல் குமார் கத்தினார். அப்பத்தாவும், குமாரின் அம்மாவும் அங்கே வந்து விட்டார்கள். பின் அவர்கள், என்ன ஆனது? என்று கேட்க அரசி ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். அதற்கு பின் வந்த பழனி, அரசியை சந்தித்து கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலில் மீனா-ராஜி இருவருமே காத்துக்கொண்டிருந்தார்கள். அங்கு வந்த அரசி, கண்கலங்கி அழுதார்.

அப்போது மீனா, எதற்காக நீ திருமணம் செய்து கொண்டாய்? என்று கேட்டார். வழக்கம்போல அரசி பொய் சொன்னார். உடனே ராஜி, அவன் உன்னை மிரட்டினானா? என்று கேட்டார். அரசி, குமார் என்னை மோசமான போட்டோவை காண்பித்து மிரட்டியது உண்மை தான். அவனிடம் மன்னிப்பு கேட்க தான் போனேன். ஆனால், அவன் என்னை வைத்து கடத்தி வைத்து என்னையும் குடும்பத்தையும் அசிங்கப்படுத்துவேன் என்று சொன்னேன். அதனால் தான் நானே தாலி கட்டிக் கொண்டேன். இதற்கெல்லாம் காரணம், சுகன்யா அத்தை தான். அவர் சொல்லி தான் நான் குமரை பார்க்க போனேன் என்று சொன்னவுடன் மீனா- ராஜி இருவருமே ஷாக் ஆனார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் ராஜி-மீனா இருவருமே உண்மையை சொல்வதற்காக கிளம்பினார்கள். உடனே அரசி வேண்டாம் என்று தடுத்து, இந்த பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னையும் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தியதற்கு அவன் அனுபவிப்பான் என்று அவர்களிடம் சத்தியம் வாங்கி கொண்டார். இன்னொரு பக்கம் சரவணன், தங்கமயிலை துணி பேக் செய்ய சொன்னார். அவரும் சந்தோசமாக செய்தார். பின் தன் அம்மாவிடம் சரவணன் பேசப் போனார். ஆனால், அவர் அரசியைப் பற்றி கவலைப்படுவதால் சரவணன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து தங்கமயிலை அழைத்துக் கொண்டு சென்றார்.

நேற்று எபிசோட்:

பின் தங்கமயில் அம்மா வீட்டிற்கு சரவணன் வருகிறான். தங்கமயில், இங்கு ஏன் வந்தோம்? எதற்கு? என்று கேள்வி கேட்டார். உடனே சரவணன், இனி நீ இங்கு தான் இருக்க வேண்டும். உண்மையை சொல்லி இருந்தால் பிரச்சனை இல்லை. பொய் மேல் பொய் சொல்லி என்னையும் என்னுடைய குடும்பத்தையும் ஏமாற்றுகிறாய். உன்னை மன்னிக்க மாட்டேன் என்று கோபமாக பேசினார். தங்கமயில் அப்பா- அம்மா இருவரும் எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே சரவணன் கேட்கவில்லை. தங்கமயில் கதறி அழுதார். இருந்தாலும் சரவணன் மனம் இறங்காமல் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, பாண்டியன் நிலைமையை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதோடு தன் கணவனுக்கு துணையாக நிற்க வேண்டும் என்று மளிகை கடைக்கு போகிறார். பாண்டியன் வேண்டாம் என்று தடுத்துமே கோமதி கேட்கவில்லை. பின் கடைக்கு பொருள் வாங்க வந்தவர்கள் அரசி திருமணத்தைப் பற்றியே மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருப்பதால் பாண்டியன், கோமதி இருவரும் ரொம்ப வருத்தப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் கோமதியை பாண்டியன் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் கிச்சனில் இருக்கும் சுகன்யாவை பார்த்து மீனா ரொம்பவே கொந்தளிக்கிறார். பின் மீனா, அரசி வாழ்க்கையை கெடுக்க உங்களுக்கு எப்படி மனது வந்தது? குமார் சொன்னால் நீங்கள் அரசியை அனுப்பி விடுவீர்களா? என்று கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதையெல்லாம் கேட்டவுடன் சுகன்யா ஷாக் ஆகி ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். உடனே மீனா, என்னிடம் ஆதாரம் இருக்கிறது. வெளியில் சொல்லட்டுமா? என்று சொன்னவுடன் சுகன்யா உண்மையை ஒத்துக் கொள்கிறார். மீனா, சித்தப்பாவிற்காக தான் உங்களை நான் சும்மா விடுகிறேன். இனிமேலும் இந்த குடும்பத்திற்கு ஏதாவது துரோகம் செய்யணும் நினைத்தால் உங்களை உண்டு இல்லை என்று செய்து விடுவேன் என்று சுகன்யாவை வெளுத்து வாங்குகிறார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணன் செய்ததை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ஆறுதல் சொல்லியுமே தங்கமயில் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full