பாண்டியன் குடும்பத்தை வெறுத்து ஒதுக்கிய பழனி, மீனா சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 22/11/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், நம்முடைய கடைக்கு போட்டியாக தான் கடையை ஆரம்பித்திருக்கிறான் என்றெல்லாம் உண்மை தெரியாமல் பழனியை திட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பழனி வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது கோமதி, இப்படியா நீ நடந்து கொள்வது? நடிக்காதே, இவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரனா? உனக்கும் அண்ணன்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றெல்லாம் கோபமாக பேசி இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பழனிக்கு எதிராக பேசி இருந்தார்கள். அவர் தரப்பு நியாயத்தை யாருமே கேட்கவில்லை.

பழனி தன் தரப்பு நியாயத்தை சொல்ல வந்தார். ஆனால், யாருமே கேட்கவில்லை. பாண்டியன், கோமதி, சரவணன் என்று வீட்டில் உள்ள எல்லோருமே மாற்றி மாற்றி பழனியை திட்டிக் கொண்டிருந்தார்கள். கோபத்தின் உச்சத்தில் சென்ற கோமதி, நீ இனிமேல் என் முகத்தில் முழிக்காதே. வீட்டை விட்டு வெளியே போ என்றார். பாண்டியனுமே வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். இதனால் பழனி ரொம்பவே மனமடைந்து விட்டார். கதிர், பழனிக்காக சப்போர்ட் செய்ய வந்தார். ஆனால், பாண்டியன் கேட்க வில்லை. பின் மனமுடைந்து அங்கிருந்து பழனி கடைக்கு வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது முத்துவேல், என்ன நடந்தது என்று விசாரித்தார். அதற்கு பழனி, பாண்டியனும் கோமதியும் தன்னை புரிந்து கொள்ளாததை பற்றி சொல்லி அழுதார். இதுதான் சந்தர்ப்பம் என்று சுகன்யா, பாண்டியன் குடும்பத்தை பற்றி மோசமாக பேசி இருந்தார். முத்துவேல், இனி உன் கடை வியாபாரத்தையும் குடும்பத்தையும் பார் என்று அறிவுரை எல்லாம் சொன்னார். இன்னொரு பக்கம் கோமதி, பழனி தனக்கு துரோகம் செய்துவிட்டான் என்று நினைத்து ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருந்தார். மீனா-ராஜி இருவருமே அப்படியெல்லாம் இருக்காது என்று பழனிக்கு சப்போர்ட்டாக பேச பார்த்தார்கள். ஆனால், கோமதி கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன், பழனி கடை ஆரம்பித்ததையும் வீட்டில் பாண்டியன் கோபப்பட்டு சண்டை போட்டதுமே சொல்கிறார். இதனால் கோபப்பட்ட செந்தில், பழனியின் கடைக்கு வருகிறார். அப்போது சரவணன்- பழனி இருவருமே கடை ஆரம்பித்ததை பற்றி பழனியிடம் கேட்கிறார்கள்.
கோபத்தில் செந்தில் ரொம்ப மோசமாக பழனியை பேசி விடுகிறார். இதனால் கொந்தளித்த பழனி, ஆமாம் திட்டம் போட்டு தான் செய்தேன். என்னை ஒதுக்கிய குடும்பம் எனக்கும் வேண்டாம் என்றெல்லாம் பதிலுக்கு பதில் பேசி விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்து சரவணன்- செந்தில் இருவருமே அங்கிருந்து சென்றார்கள். இதையெல்லாம் பார்த்து சக்திவேல் ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் காந்திமதி, இது எங்களுக்கே தெரியாத நடந்த விஷயம் என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், கோமதி கேட்கவில்லை. ருத்ர தாண்டவம் ஆடுகிறார். வடிவு, மாரி இருவருமே பழனியை திட்டியதற்காக கோமதி குடும்பத்தை திட்டுகிறார்கள். உடனே கொந்தளித்த மீனா, நீங்கள் பண்ணது நியாயமா? நீங்கள் செய்து தான் துரோகம். நீங்கள் மூத்த மருமகளாக இப்படி கேவலமாக செய்வீர்களா? என்றெல்லாம் வெளுத்து வாங்குகிறார். இதைக் கேட்டு முத்துவேல் குடும்பம் ஆடி போகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full