தங்கமயிலுக்காக துணை நிற்கும் மீனா, முத்துவேல் வீட்டில் நடக்கும் விசேஷம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மனமுடைந்த தங்கமயில் செத்துவிடலாம் என்று யாரும் இல்லாத இடத்திற்கு போனார். அந்த வழியாக வந்த மீனா, தங்கமயிலை பின் தொடர்ந்து போனார். பின் தங்கமயில், கிணற்றின் மீது ஏறி நின்று குதிக்கப் போனார். உடனே அங்கு வந்த மீனா தடுத்து நிறுத்தி விசாரித்தார். அப்போது தங்கமயில், தன் அம்மா சொன்னதையும் சரவணன் திட்டியதையும் சொல்லி எமோஷனலாக அழுதார். பின் மீனா, தங்கமயிலை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வந்த மீனா ஆறுதல் சொல்லிவிட்டு சாப்பாடு கொடுத்தார். அந்த சமயம் பார்த்து செந்தில் வந்து விட்டார். தங்கமயிலை பார்த்தவுடன் செந்தில் பயங்கரமாக கோபப்பட்டார். மீனாவிடம் சண்டை எல்லாம் போட்டார். தங்கமயில், என்னால் பிரச்சனை வேண்டாம். நான் கிளம்புகிறேன் என்றார். மீனா, தங்கமயிலை தடுத்து நிறுத்தி செந்தில் இடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்க பார்த்தார். ஆனால், மீனா சொல்வதை செந்தில் கேட்கவில்லை. சண்டை போட்டுவிட்டு செந்தில் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
செந்தில், தன் வீட்டில் நடந்ததை எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டார். பின் ராஜி படிப்பு விஷயத்தை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், செந்தில் தன்னுடைய மாமனார் வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொன்னார். அப்போது மீனாவின் அம்மா போன் செய்து கண்ட மேனிக்கு திட்டுகிறார். அதற்குப்பின் மீனாவின் அப்பா, நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டாமா? லஞ்சம் வாங்குவது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று செந்திலுக்கு தப்பு தப்பாக சொல்லிக் கொடுத்தார். மறுநாள் காலையில் செந்தில் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது மீனா, தங்கமயிலை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, தங்கமயிலுக்கு ஆறுதல் சொல்லி அவருடைய அம்மா வீட்டுக்கு அழைத்து செல்கிறார். தங்கமயிலை பார்த்தவுடன் பாக்கியம் பயங்கரமாக கொந்தளித்து வழக்கம் போல கத்துகிறார். மீனா எவ்வளவோ சமாதானம் செய்கிறார். இருந்தாலும் பாக்கியம் மோசமான வார்த்தைகளால் தங்கமயிலை திட்டிக் கொண்டிருக்கிறார். பின் ரூமிற்கு அழைத்துச் சென்ற மீனா, தங்க மயிலுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தவறான முடிவெடுக்க கூடாது என்று அறிவுரை சொல்கிறார். அப்போது தங்கமயில், எனக்கு வேலை ஏதாவது வாங்கி தர முடியுமா? இந்த உதவி மட்டும் செய் என்று சொல்கிறார். மீனாவும் சம்மதிக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மீனா, அக்காவிடம் யாரும் மோசமாக பேசாதீர்கள். அவர் தற்கொலை முடிவுக்கு சென்றார்கள் என்கிறார். இருந்தாலும் பாக்கியம், தங்கமயிலை தான் திட்டிக் கொண்டிருக்கிறார். மீனா, தங்கமயிலுக்கு தைரியம் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் கதிர், ராஜிக்கு பீஸ் கட்டி கோச்சிங் சென்டரில் சேர்த்து விடுகிறார். இன்னொரு பக்கம் முத்துவேல், குமாருக்கு நான் நல்ல பெண் பார்த்துவிட்டேன். நல்ல சம்மந்தம். சீக்கிரத்தில் கல்யாணத்தை முடித்து விடலாம் என்று சொல்கிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லாருமே சந்தோஷப்படுகிறார்கள். அதுக்கு பின் செந்திலை சந்தித்த மீனா நடந்ததை எல்லாம் சொல்கிறார். இருந்தாலும் செந்தில், தங்கமயில் விஷயத்தில் தலையிடாதே என்று அறிவுரை சொல்கிறார்.