தங்கமயிலை சந்தித்து பேசிய மீனா, பாண்டியனை அசிங்கப்படுத்தும் சக்திவேல் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன் என்னுடைய சாவிற்கு காரணம் நீங்கள் தான் எழுதி வைத்து செத்து விடுவேன் என்றார். இதைக் கேட்ட பாண்டியன் திட்டுகிறார். பின் சரவணன், என்னால் இவளுடன் சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்றார். இதை கேட்டு தங்கமயில் ஷாக் ஆனார். பாக்கியா, நீங்கள் உங்கள் முடிவை சொல்லிவிட்டீர்கள். நானும் உங்களை சும்மா விடமாட்டேன். கோர்ட்டு கேஸ் என்று உங்கள் குடும்பத்தைச் சந்தி சிரிக்க வைப்பேன் என்று சவால் விட்டு சென்றார்.
செந்தில், நன்றாக தீர விசாரித்து திருமணம் செய்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை. சரவணன் அண்ணனுக்கு இந்த நிலைமை வந்திருக்காது. பெற்றவர்கள் பேச்சை கேட்டது தான் தப்பு என்பது போல பேசி இருந்தார். இதைக் கேட்டு கோமதிக்கு பயங்கர கோபம் வந்தது. உடனே செந்தில், நானும் கதிரும் காதல் திருமணம் செய்து வந்தபோது என்ன பேச்சு பேசினார் அப்பா. இப்போது அவர் பார்த்து செய்து வைத்த கல்யாணம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று குத்தி காட்டிக் கொண்டிருந்தார். இதனால் கோமதி, செந்திலை திட்டினார். பின் மீனா, செந்திலை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் சரவணன், விவாகரத்து கேட்டதை நினைத்து தங்கமயில் புலம்பி கொண்டிருந்தார். பாக்யா, எப்படியாவது உன்னை நான் அந்த வீட்டில் வாழ வைப்பேன் என்றார். அதற்கு
தங்கமயில், மீனாவிற்கு விடாமல் போன் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மீனா போன் பேசி இருந்தார். அப்போது தங்கமயில், நான் உங்களுக்கு வேண்டாதவள் ஆகி விட்டேனா? என்னுடைய நிலைமையை யாரும் யோசிக்க இல்லையா என்றெல்லாம் அழுது புலம்பினார். ஆனால், மீனா எதுவுமே சொல்லாமல் போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் கடைக்கு சென்றார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, தங்கமயிலை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கிறார். மீனாவை பார்த்தவுடன் தங்கமயில் ரொம்பவே கதறி அழுகிறார். தங்கமயில், நான் இனிமேல் அந்த வீட்டிற்கு வர முடியாதா? என்னை மன்னிக்க மாட்டார்களா? எனக்கு விவாகரத்து வேண்டாம். இவர்கள் சொன்ன பொய்யால் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம் கதறி அழுகிறார்.
மீனாவால் எதுவுமே பேச முடியவில்லை. தங்கமயிலுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சரவணன், பாண்டியன் இருவரும் கடைக்கு வந்து விடுகிறார்கள். அப்போது டீக்கடையில் சரவணன், பாண்டியன் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அதை பார்த்த சக்திவேல், வேண்டும் என்று பாண்டியன் குடும்பத்தை கேவலப்படுத்தி தனக்கு தெரிந்தவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் சரவணன், வாழ்க்கை நினைத்து கோமதி அழுது கொண்டிருக்கிறார். பின் கதிர்- ராஜி இருவருமே கோமதிக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இருந்தாலும் கோமதியின் மனது கேட்கவில்லை. தன் மகனின் வாழ்க்கை என்ன ஆகுமோ? என்ற கவலையில் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.