தந்தை என்று கூட பார்க்காமல் ரவியை வெளுத்து வாங்கும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

தந்தை என்று கூட பார்க்காமல் ரவியை வெளுத்து வாங்கும் மீனா

By subhashini · 27/6/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், மாட்டிக் கொள்வோமா? என்று திரு திரு பயந்து கொண்டிருந்தார். பின் உயர் அதிகாரியையும், அங்கிருந்து சில அதிகாரிகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்கு கைது செய்தார்கள். செந்தில் ஒரு வழியாக செந்தில் அதிலிருந்து தப்பித்து விட்டார். இருந்தாலுமே அந்த இடத்தில் மாட்டிக் கொண்டு இருந்தால் என்ன நடக்கும்? என்று யோசித்துப் பார்த்து செந்தில் பயப்பட்டார்.

வீட்டிற்கு வந்த குமார், அப்பத்தாவிடம் அரசி வேறொரு பையனுடன் பேசி இருக்கும் விஷயத்தை சொல்லி கதருகிறார். குமாரும் சத்தத்தை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். குமார், அரசியை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தார். முத்துவேல், பாண்டியனிடம் பொண்ணு கேட்க முடியாது என்றார். சக்திவேல், பாண்டியன் மகளை விட நான் வசதியான வீட்டு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பேன் என்றார். அதற்குப்பின் காந்திமதி, நீ ஒழுங்காக நல்ல பையன் என்று பெயர் எடு.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நான் அரசிடம் பேசி புரிய வைக்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் செந்தில் அலுவலகத்தில் வருமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருக்கும் விஷயத்தை அறிந்து மீனா பதறி போய் ஆபீஸிற்கு வந்தார். செந்தில் ரொம்பவே பயத்தில் இருப்பது அறிந்து மீனா ஆறுதல் சொன்னார். பின் செந்தில், மீனா இருவரும் வீட்டிற்கு வந்து விட்டார்கள். அப்போது மீனா, என்ன நடந்தது? எதற்காக பயப்படுகிறீர்கள்? நீங்க வீட்டில் வைத்த பணம் லஞ்ச பணமா? என்றெல்லாம் கேட்டார். செந்தில், வேறு வழி இல்லாமல் எல்லா உண்மையும் சொல்லி விட்டார். இதனால் கொந்தளித்த மீனா, செந்திலை திட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் குமார், எனக்கு எப்படியாவது அரசியை கல்யாணம் பண்ணி வையுங்கள். அரசி இல்லாமல் என்னால் வாழ முடியாது என்றெல்லாம் புலம்புகிறார். காந்திமதி, உனக்கு அரிசயை நான் திருமணம் செய்து வைக்கிறேன். இது சத்தியம். ஆனால், நீ நான் சொல்வது போல் நடந்து கொள் என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட பழனி, காந்திமதி இடம் சண்டைக்கு போடுகிறார். காந்திமதி, எல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்கிறார். அதற்குப்பின் செந்தில், மீனாவிற்கு எல்லா உண்மையும் தெரிந்த விஷயத்தை தன்னுடைய மாமனாரிடம் சொல்லி புலம்புகிறார்.

சீரியல் ட்ராக்:

ரவி, அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என்று அறிவுரை எல்லாம் சொல்கிறார். செந்தில், இனிமேல் நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த செந்திலிடம் மீனா, உங்களை யார் இப்படி எல்லாம் செய்ய சொன்னது என்று விசாரிக்கிறார். செந்தில், தன்னுடைய மாமனார் சொல்லி தான் இப்படி எல்லாம் செய்தேன் என்ற உண்மையை சொல்லிவிடுகிறார். இதனால் கொந்தளித்த மீனா, தன்னுடைய அப்பா என்று கூட பார்க்காமல் ரவியை வெளுத்து வாங்குகிறார். ரவியால் எதுவுமே பேச முடியாமல் திணறுகிறார். இருந்தாலும் மீனா, தன்னுடைய அப்பாவை திட்டி தன்னுடைய கணவரை விட்டு ஒதுங்கி இருக்க சொல்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full