காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட குமார், முத்துவேல் கொடுத்த பதிலடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

முத்துவேலிடம் மன்னிப்பு கேட்ட குமார்

By subhashini · 9/6/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, சரவணன் அஞ்சலியுடன் பேசுவதை பற்றி பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சரவணன், நாங்கள் நட்பாக தான் பேசுகிறோம் என்றார். கோமதி, எதுவாக இருந்தாலும் விவாகரத்து கேஸ் முடியும் வரை எதுவும் பண்ணாதே. உனக்கு குழந்தை பிறப்பதற்கு போகிறது. தயவுசெய்து குழந்தை பற்றியும் மயில் பற்றி யோசி என்றார். சரவணன், எனக்கு எல்லாம் தெரியும். எனக்கு அறிவுரை எல்லாம் சொல்ல தேவையில்லை என்று அவமரியாதையாக கோமதி இடம் பேசிவிட்டு சென்றார். இதையெல்லாம் பார்த்து பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

பாண்டியன், கோமதி இருவரும் முத்துவேலை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தார்கள். முத்துவேலிடம் நலம் விசாரித்துவிட்டு பாண்டியன்-கோமதி இருவரும் வெளியே வந்தார்கள். இதை பார்த்து சக்திவேல் கோபப்பட்டார். பின் தன் அண்ணனை சந்தித்த சக்திவேல் மன்னிப்பு கேட்டு பேசி இருந்தார். அதோடு பாண்டியன் குடும்பத்துடன் சேர்ந்து விட்டீர்களா? என்றார். வடிவு, உங்கள் பங்குக்கும் ஏதாவது செய்யுங்கள் என்று கோபமாக பேசி இருந்தார். முத்துவேல், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ எதை போட்டும் குழப்பிக் கொள்ளாதே வீட்டுக்கு போ என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் கார்த்திகேயன், தன்னுடைய புது பொருட்களை எல்லாம் மீண்டும் பாண்டியன் கடைக்கு கொண்டு வந்து வைத்தார். அந்த சமயம் பார்த்து அரசி அங்கு வந்தார். அரசி இடம் சகஜமாக கார்த்திகேயன் பேசினார். பின் கார்த்திகேயன் கிளம்பியவுடன் பாண்டியன் விசாரித்தார். அரசி, நடந்ததை சொன்னார். அதற்குப்பின் தங்கமயில், மீனாவிற்கு ஃபோன் செய்து கதிர் விஷயத்தை பற்றி கேட்டு விசாரித்தார். மீனாவுமே நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்குப்பின் மீனா, ஹாஸ்பிடலுக்கு செக்கு போகும் விஷயத்தை கேட்டார். தங்கமயில், ஹாஸ்பிடலுக்கு போகணும். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதை எல்லாம் கோமதி கேட்டு விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, ஹாஸ்பிடழுக்கு தங்கமயில் உடன் யாருமே செல்லவில்லையா? என்று கேட்கிறார். மீனா, யாரும் போகவில்லை. தங்க மயில் அக்கா மட்டும் தான் தனியாக போகிறார் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் சரவணன், அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அஞ்சலி, நான் உன் வாழ்க்கையில் வந்ததால் உனக்கு தான் நிறைய பிரச்சினை. நாம் இனி பேசிக்கொள்ள வேண்டாம் என்று சொல்கிறார். சரவணன், என்னுடைய வாழ்க்கை உன்னுடன் தான். நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார். இருந்தாலுமே அஞ்சலி மனம் மாறவில்லை.

சீரியல் ட்ராக்:

நீ உன்னுடைய குழந்தை குடும்பத்துடன் சந்தோஷமாக இரு என்று அழுது கொண்டே அங்கிருந்து செல்கிறார். அஞ்சலி சொன்ன வார்த்தையால் சரவணன் ரொம்பவே கஷ்டத்தில் இருக்கிறார். அதற்குப்பின் முத்துவேலை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்கள். குமார், முத்துவேல் காலில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்கிறார். பழனி, காந்திமதி எல்லோருமே குமாரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். முத்துவேல், குமாரை மன்னிக்காமல் அங்கிருந்து உதாசனைப் படுத்தி செல்கிறார். அதற்குப்பின் துக்கம் தாங்க முடியாமல் சரவணன் நிறைய குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார். இதை அறிந்த கோமதி சண்டை போடுகிறார். பாண்டியனும் கோபப்பட்டு திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், சரவணன் எதுவுமே கண்டுகொள்ளாமல் ரூமுக்குள் சென்று விடுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full