போலீஸ் ஸ்டேஷன் வந்த முத்துவேல்-சத்திவேல், கோமதி குடும்பத்தை காப்பாற்றுவார்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி, கதிர் இருவரும் ஆறுதல் சொல்லியுமே சரவணன் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னுடைய கோபத்தின் வெளிப்பாட்டை காண்பித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் வீட்டுக்கு வரவில்லை என்று வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது சரவணன், கதிர் இருவரும் குடித்திருப்பதை பாண்டியன் கண்டுபிடித்து விட்டார். இருந்தாலும் பெரிதாக திட்டாமல் பாண்டியன் சென்று விட்டார். அதற்குப்பின் ரூமிற்கு சென்ற கதிர், போதையில் ராஜி போலீசாக வேண்டும். நீ நன்றாக படி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.
தங்கமயில் தன்னுடைய வாழ்க்கையை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். அப்போது கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்திருப்பதாக சொன்னார்கள். பின் தங்கமயில், அதை வாங்கி படித்துப் பார்த்தார். அது சரவணன் அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ். அதை பார்த்தவுடன் தங்கமயில் ஷாக்கானார். வீட்டில் உள்ள எல்லோருமே கோபப்பட்டார்கள். தங்கமயில் தன்னுடைய வாழ்க்கை முடிந்து விட்டது என்று புலம்பி கொண்டிருந்தார். சரவணன், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய விஷயத்தை பாண்டியனிடம் சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன் இப்போது இது அவசியமா? யோசித்து முடிவெடு என்றார். அதற்கு சரவணன், இந்த விவாகரத்து விஷயத்தில் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லாதீர்கள். இதுதான் என்னுடைய முடிவு. நான் மாற மாட்டேன் என்றார். அதற்குப்பின் மாணிக்கம்- பாக்கியா இருவருமே போலீஸ் ஸ்டேஷன் சென்று பாண்டியன் குடும்பத்தின் மீது புகார் கொடுத்தார்கள். அப்போது பாக்யா, என் மகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள். அவர்கள் பண்ண கொடுமையால் என்னுடைய மகள் கரு கலைந்து விட்டது என்றெல்லாம் பொய்யான புகார்களை எல்லாம் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் பாக்கியா கொடுத்த புகாரால் மீனாவை தவிர பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோரையுமே கைது செய்து விடுகிறார்கள். இதனால் அப்பத்தா, மாரி, வடிவு எல்லோருமே புலம்பி கொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டிற்கு வந்த முத்துவேல், சக்திவேலிடம் நடந்ததை எல்லாம் அப்பத்தா சொல்கிறார். சக்திவேல்-முத்துவேல் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் சென்று விடுகிறார்கள். இன்னொரு பக்கம் போலீஸ், தங்கமயில் கையெழுத்து இருந்தால் தான் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும். அவரை வர சொல்லுங்கள் என்கிறார். பாக்கியா, தங்கமயில் வந்தால் உண்மையெல்லாம் வெளிவந்து விடும் என்று பயந்து கொண்டு அவள் ரொம்பவே மனமடைந்து இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
நான் வீட்டுக்கு போய் கையெழுத்து வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி அங்கிருந்து சென்று விடுகிறார். செந்தில், மீனாவிற்கு போன் செய்து உன்னை போலீஸ் கைது செய்யவில்லையா? நாங்கள் எல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம் என்று நடந்த உண்மை எல்லாம் சொல்கிறார். அதைக் கேட்டு மீனா அதிர்ச்சி ஆகிறார். அதற்குப்பின் முத்துவேல் - சக்திவேல் இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். ராஜி, தன் அப்பாவை பார்த்துவிட்டு கட்டிப்பிடித்து அழுகிறார். முத்துவேலும் தன் மகளுக்கு ஆறுதல் சொல்கிறார். கோமதியும் ரொம்ப எமோஷனலாக தன் அண்ணன்களை பார்த்து அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.