கோமதி குடும்பத்தை காப்பாற்ற போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த முத்துவேல்,சக்திவேல் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 28/12/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, தங்கமயில் பார்த்து வந்த விஷயம் அறிந்த செந்தில் கோபப்பட்டார். மீனா தன் தரப்பு நியாயம் எடுத்து சொல்லியுமே செந்தில் கேட்கவில்லை. ரொம்ப கடுமையாக மீனாவிடம் பேசிவிட்டு சென்னார்ர். இன்னொரு பக்கம் கதிர், சரவணன், பழனி மூவருமே சேர்ந்து குடித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சரவணன், தங்கமயில் தன் வாழ்க்கை சீரழிந்ததை நினைத்து ரொம்ப எமோஷனலாக கோபப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்.

பழனி, கதிர் இருவரும் ஆறுதல் சொல்லியுமே சரவணன் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னுடைய கோபத்தின் வெளிப்பாட்டை காண்பித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் வீட்டுக்கு வரவில்லை என்று வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது சரவணன், கதிர் இருவரும் குடித்திருப்பதை பாண்டியன் கண்டுபிடித்து விட்டார். இருந்தாலும் பெரிதாக திட்டாமல் பாண்டியன் சென்று விட்டார். அதற்குப்பின் ரூமிற்கு சென்ற கதிர், போதையில் ராஜி போலீசாக வேண்டும். நீ நன்றாக படி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

தங்கமயில் தன்னுடைய வாழ்க்கையை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். அப்போது கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்திருப்பதாக சொன்னார்கள். பின் தங்கமயில், அதை வாங்கி படித்துப் பார்த்தார். அது சரவணன் அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ். அதை பார்த்தவுடன் தங்கமயில் ஷாக்கானார். வீட்டில் உள்ள எல்லோருமே கோபப்பட்டார்கள். தங்கமயில் தன்னுடைய வாழ்க்கை முடிந்து விட்டது என்று புலம்பி கொண்டிருந்தார். சரவணன், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய விஷயத்தை பாண்டியனிடம் சொன்னார்.

சீரியல் ட்ராக்:

பாண்டியன் இப்போது இது அவசியமா? யோசித்து முடிவெடு என்றார். அதற்கு சரவணன், இந்த விவாகரத்து விஷயத்தில் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லாதீர்கள். இதுதான் என்னுடைய முடிவு. நான் மாற மாட்டேன் என்றார். அதற்குப்பின் மாணிக்கம்- பாக்கியா இருவருமே போலீஸ் ஸ்டேஷன் சென்று பாண்டியன் குடும்பத்தின் மீது புகார் கொடுத்தார்கள். அப்போது பாக்யா, என் மகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள். அவர்கள் பண்ண கொடுமையால் என்னுடைய மகள் கரு கலைந்து விட்டது என்றெல்லாம் பொய்யான புகார்களை எல்லாம் சொன்னார்.

https://www.youtube.com/watch?v=9yHbJL2tMqY

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வரதட்சணை கொடுமை என்ற பெயரில் பாண்டியன் குடும்பத்தை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள். அப்போது முத்துவேல்- சக்திவேல் இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். ராஜி அப்பாவை கட்டிப்பிடித்து அழுகிறார். பின் கோமதி தன் அண்ணனிடம் எமோஷனலாக கதறி அழுகிறார். பின் போலீஸிடம் முத்துவேல், அவர்கள் மீது எந்த தவறும் இருக்காது என்று எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். போலீஸ், இது அவருடைய மருமகள் கொடுத்த புகார். எதுவும் செய்ய முடியாது.

behindtalkies AMP · Quick view
View full