பாண்டியனை அசிங்கப்படுத்தும் முத்துவேல், வேதனையில் உடைந்த பழனி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், நீங்கள் மறைத்ததெல்லாம் எனக்கு பெரிய விஷயமே கிடையாது. ஆனால், என்னிடம் பொய் சொன்னது ரொம்பவே தப்பு. என்னை யார் ஏமாற்றினாலும் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். என் பிள்ளைகளையும் நான் அப்படித்தான் வளர்த்தேன். இவ்வளவு பெரிய துரோகத்தை நீங்கள் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று ரொம்ப எமோஷனலாக
பேசி இருந்தார்.
பாண்டியன் வீடு சோக கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றது. செந்தில்-கதிர் இருவரும் எல்லோருக்கும் சாப்பாடு வாங்கி வந்து கொடுக்க, எல்லோரும் சாப்பிடுகிறார்கள். சரவணன் வருத்தத்தில் இருப்பதால் பாண்டியன் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில் வேதனையில் வீட்டில் நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்து அழுது கொண்டே வருகிறார். பின் தன்னுடைய மாமனார் வீட்டுக்கு மீண்டும் செல்ல நினைக்கிறார். ஆனால், தங்கமயில் அப்பா-அம்மா இருவரும் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
வீட்டிற்கு வந்த பின்னும் தங்கமயில் தன்னுடைய கணவர் வீட்டில் நடந்ததையே நினைத்து, புலம்பி அழுது கொண்டிருக்கிறார். உடனே தங்கமயில் அம்மா, உன்னை எப்படியாவது அந்த வீட்டில் கொண்டு போய் சேர்ப்பேன். உன்னை அங்கு வாழ வைப்பேன் என்றெல்லாம் சபதம் போடுகிறார். இருந்தாலும் தங்கமயில் தன் தங்கையிடம் பொய் சொல்லி திருமணம் செய்யாதே என்றெல்லாம் புலம்பி கொண்டிருக்கிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன் விவகாரம் அறிந்து ஊரில் உள்ள எல்லோருமே பாண்டியனிடம் விசாரிக்கிறார்கள். பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை. பின் கோயிலில் மனமடைந்து பாண்டியன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்போது வந்த முத்துவேல், தங்கமயில் குடும்பத்தை பற்றி எல்லாம் புட்டுப்புட்டு வைக்கிறார். அதோடு ஒரு அரை மணி நேரம் நான் கேட்டதற்கு எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார்கள். இப்படியா விசாரிக்காமல் கல்யாணம் செய்வது. உன்னை நான் அசிங்கப்படுத்த நினைத்தேன். நீயே அசிங்கப்பட்டு விட்டாய் என்றெல்லாம் ஏளனம் பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை. அங்கு இருந்து கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் வடிவு-மாரி இருவருமே பாண்டியன் வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் பழனியிடம் சொல்வதால் அவரும் வேதனையில் பாண்டியன் வீட்டிற்கு வந்து விசாரிக்கிறார். கோமதி, பழனியை தான் திட்டி அனுப்புகிறார். இதனால் பழனிவேல் அங்கிருந்து வந்து விடுகிறார். பின் முத்துவேல்-சக்திவேல் இருவரும், உனக்கு நாங்கள் இருக்கிறோம். பாண்டியன் குடும்பத்தை விட்டு உன்னுடைய தொழிலில் மட்டும் கவனம் செலுத்து என்றெல்லாம் அறிவுரை சொல்லி பாண்டியன் அவமானப்பட்டு இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.