பாண்டியன் சொன்ன விஷயத்தால் கொந்தளித்த சக்திவேல், முத்துவேல் போட்ட கண்டிஷன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 18/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வீட்டில் போட்டது போட்டபடியே இருக்கிறது என்று செந்தில் கோபப்பட்டு சண்டை வாங்கினார். கோபத்தில் மீனா, நானா வீட்டிற்கு இந்த வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீங்கள் தான் செய்யணும் என்று திட்டி விட்டு சென்றார். பின் செந்தில், தன்னால் முடிந்த அளவுக்கு வேலை செய்துவிட்டு ஹோட்டலில் சாப்பாடு வாங்கிட்டு வரப் போனார். அந்த சமயம் பார்த்து கோமதி போன் செய்து விசாரிக்க, மீனா எமோஷனலாக பேசி இருந்தார்.

செந்தில்-மீனா இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது செந்தில், தன் அப்பா கொடுத்த பணத்தை பற்றி கேட்டார். மீனா, தர முடியாது. எதுவாக இருந்தாலும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார். பின் வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டை நடந்தது. இன்னொரு பக்கம் கோமதி, தன்னுடைய அம்மாவின் 75 வது பிறந்த நாளை பற்றி சொன்னார். பாண்டியன், பிறந்தநாளுக்கு செல்வதற்கு ஒத்துக்கொண்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் பழனிக்கு கால் வலி என்பதால் சரவணன் மருந்து தேய்த்து காலை அமுத்தி விட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்த சுகன்யா, சரவணனை திட்டிவிட்டு பழனியை அழைத்துக்கொண்டு சென்றார். பின் தங்கமயில், விஉன் மாமாவிற்கு சேவகம் செய்து கொண்டு இருப்பீர்களா? நான் இந்த வீட்டில் ஒரு மனுசியாக இருப்பதே தெரியவில்லையா? எதற்காக என்னை கல்யாணம் செய்தீர்கள்? என்றெல்லாம் கேட்டார். இதனால் கோபப்பட்ட சரவணன், அதுதான் எனக்கும் தெரியவில்லை. தயவு செய்து கிளம்பி உன் அம்மா வீட்டிற்கு போ என்றெல்லாம் திட்டினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர்-ராஜி இருவருமே அப்பத்தாவின் பிறந்தநாளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர், தாத்தா- அப்பத்தா பற்றி எல்லாம் ராஜியிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். மறுநாள் காலையில் அப்பத்தாவின் பிறந்தநாளுக்காக பாண்டியன் எல்லோரிடமும் பேசுகிறார்.
அப்போ பாண்டியன், அப்பத்தாவின் பிறந்தநாளுக்கு அன்னதானம் போடலாம். எந்த பிரச்சனையும் வரக்கூடாது. யாருடைய மனசும் கஷ்டப்படக்கூடாது என்று சொல்கிறார். ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்துவிடலாம் என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட சுகன்யா, உடனே ஓடி வந்து சக்திவேலிடம் வத்தி வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை கேட்டு சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டு பாண்டியனிடம் சண்டை போட தயாராகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே தடுத்தும் கேட்கவில்லை. பின் முத்துவேல் தடுத்து நிறுத்தி, கோயிலுக்கு பாண்டியன் வீட்டிலுமே வரட்டும். அன்னதானம் போடட்டும். எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம். இது நம் அம்மாவினுடைய ஆசை. அது நிறைவேறட்டும் என்று சொல்கிறார். சக்திவேல் கோபப்பட்டு வீட்டில் உள்ள எல்லோரிடமும் சண்டை வாங்குகிறார். முத்துவேல், அம்மாவின் பிறந்த நாளில் எந்த பிரச்சினையும் நடக்கக்கூடாது. அமைதியாக இரு என்று சொல்வதால் அங்கிருந்து சக்திவேல் கிளம்பி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full