குமார் செய்த வேலையால் அவமானப்பட்ட முத்துவேல், பாண்டியன் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 27/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி, என்னை பார்க்க வந்தது சந்தோஷமாக இருக்கிறது. இதே மாதிரி வருடம் வருடம் என்னை பார்க்க குடும்பமாக சேர்ந்து வாருங்கள் என்றார். இதை கேட்டு சக்திவேலுக்கு பயங்கர கோபம் வந்து பழனிவேலை திட்டினார். உடனே எல்லோருமே சக்திவேலை தடுத்து நிறுத்தினார்கள். அதற்குப்பின் பிறந்தநாள் விழாவில் சக்திவேல் தன்னுடைய அம்மாவிற்கு 12 பவுனில் தங்கச் செயின் போடுவதாக பெருமையாக பேசி இருந்தார். இது எல்லாம் ஓரமாக நின்று பாண்டியன் குடும்பம் பார்த்துக் கொண்டிருந்தது.

காந்திமதியின் பிறந்த நாளுக்காக கதிர் தன்னுடைய தாத்தாவுடன் இருக்கும் போட்டோவை கொடுத்தார். அதை பார்த்து காந்திமதி ரொம்ப எமோஷனலாக அழுதார். பின் பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே காந்திமதியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். இதையெல்லாம் பார்த்து சக்திவேல் பயங்கரமாக கொந்தளித்தார். அதற்குப்பின் காந்திமதி ரெண்டு குடும்பமும் சேர்ந்து நின்று ஒரு போட்டோ எடுக்கணும் என்றார். முத்து, சக்திவேல் ஒத்துக் கொள்ளவே இல்லை. எல்லோரும் ரொம்பவே கெஞ்சி கேட்டு பேசிய பிறகுதான் முத்துவேல் ஒத்துக் கொண்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் முத்துவேல்-பாண்டியன் இரண்டு குடும்பம் சேர்ந்து காந்திமதியுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இதை பார்த்து காந்திமதிக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. அதற்குப்பின் காந்திமதி தன்னுடைய மகள் மருமகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவருமே போட்டோ சூட் செய்து கொண்டிருந்தார்கள். பின் பாண்டியன் தன்னுடைய உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவேல், தன்னுடைய உறவினர்களுக்கு கறி விருந்து வைக்க அழைத்து வருகிறார். ஆனால் பாண்டியன் குடும்பத்தினர் ஆர்டர் செய்த சாப்பாடு தான் வந்திருக்கிறது. அதை பார்த்து சக்திவேல் பயங்கரமாக கோபப்படுகிறார். முத்துவேல், சாப்பாடு என்னாது? ஏன் வரவில்லை? என்று கேட்கிறார். பின் குமார், போன் செய்து சாப்பாடு ஆர்டர் எடுத்தவரிடம் விசாரிக்கிறார். அந்த நபர், நான் ஏற்கனவே உங்களை வேறு ஒருவரிடம் சாப்பாடு ஆர்டர் கொடுக்க சொல்லிவிட்டேன் என்று சொல்கிறார்கள். அப்போது தான் குமாருக்கு சாப்பாடு ஆர்டர் சொல்லாதது நியாபகம் வருகிறது.

சீரியல் ட்ராக்:

பின் குமார், நடந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்கிறார். கோபப்பட்ட முத்துவேல், குமாரை அடித்து விடுகிறார். பின் பாண்டியன் வீட்டில் எல்லோருமே சாப்பிட அழைக்கிறார்கள். கோபத்தில் சக்திவேல் கத்துகிறார். இருந்தாலுமே விடாமல் பாண்டியன் வீட்டில் இருப்பவர்கள் முத்துவேல் உறவினர்களை சாப்பிட அழைக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து முத்துவேல், சக்திவேலுக்கு பயங்கர கோபம் வருகிறது. அப்பத்தாவுமே தன் மகளுடன் சேர்ந்து சாப்பிடுகிறார். சொந்தக்காரர்கள், பாண்டியன் குடும்பத்தை ரொம்ப பெருமையாக பேசுகிறார்கள், இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full