கடை இருக்கும் இடம் தெரியாமல் குழம்பி போகும் பழனி, முத்துவேல் செய்யும் சர்ப்ரைஸ் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 18/11/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், இது என்னுடைய கார்டே இல்லை என்று பொய் சொன்னார். கோபத்தில் சரவணன், இன்னும் எவ்வளவுதான் பொய் சொல்லி என்னை ஏமாற்றுவாய். மொத்த குடும்பமே இப்படித்தான் ஏமாற்றுக்காரர்களா? இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை என்று பயங்கரமாக கத்தினார். பயந்து போன தங்க மயில் கெஞ்சி கதறி அழுதார். ஆனால், சரவணன் கேட்கவில்லை. இன்னியோடு உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன். வீட்டில் எல்லோரிடமும் உண்மையை சொல்கிறேன். வண்டியில் ஏறி என்று தங்கமயிலை அழைத்துக் கொண்டு வந்தார்.

தங்கமயிலை அழைத்துக் கொண்டு கோபத்தில் சரவணன் வீட்டிற்குள் வந்தார். ஆனால், அதற்குள்ளே வீட்டுக்குள் பழனிவேல் உடைய பஞ்சாயத்து சென்று கொண்டிருக்கிறது. நாளை கடை திறக்கப் போகும் விஷயத்தைப் பற்றி சுகன்யா வீட்டில் எல்லோரிடமும் சொல்லிவிட்டார். கோமதி, எதற்காக முன்னாடியே சொல்லவில்லை என்று சண்டை போட்டார். பழனி, தன் தரப்பு நியாயத்தை எவ்வளவோ எடுத்து சொல்லி பார்க்கிறார். ஆனால், கோமதி கேட்கவில்லை. பின் பழனி, பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு தன் அண்ணன்கள் ஏற்பாடு செய்த விஷயத்தை சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பாண்டியன், நீ நல்லபடியாக கடையை தொடங்கு என்றார். பின் பழனிவேல் கடையை திறக்கும் விஷயத்தைப் பற்றி செந்தில், மீனாவிடம் கோமதி சொன்னார். இன்னொரு பக்கம் சுகன்யா, பாண்டியன் வீட்டில் நடந்ததை எல்லாம் முத்துவேல் வீட்டில் சொன்னார். இதை கேட்டு சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டார். பழனிவேல், நான் இந்த கடை வைக்க சம்மதித்து இருக்கக்கூடாது. அவர்களிடம் சொல்லாமல் செய்தது தவறுதான் என்றெல்லாம் வருத்தப்பட்டு பேசி இருந்தார். இதனால் முத்துவேல் திட்டினார். பின் காந்திமதி, பழனியை சமாதானம் செய்து கடையை திறப்பதற்கான வேலைகளை செய்ய சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன், உன்னுடைய சுயரூபம் பற்றி வீட்டில் சொல்ல வரும்போதுமெல்லாம் ஏதாவது வேறு ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. நீயும் தப்பித்து விடுகிறாய். சித்தப்பா நல்லபடியாக மாமா நல்லபடியாக கடையை திறக்கட்டும். நீ மூட்டை முடிச்சை கட்டி ரெடியாக இரு. உன்னை பற்றி சொல்வது உறுதி தான் என்றெல்லாம் சொல்கிறார். தங்கமயில், என்ன நடக்குமோ என்று புலம்பி கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ராஜி, தூங்கிக் கொண்டே இருக்கும் போது கெட்ட கனவு வருவதால் கதிர் பக்கத்தில் படுத்து கொள்கிறார். மறுநாள் காலையில் எல்லோருமே பழனியின் புதுக்கடைக்கு செல்வதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால், பாண்டியன் மட்டும் வரவில்லை.

சீரியல் ட்ராக்:

பின் பாண்டியன் வீட்டில் கடை எங்கே? இருக்கிறது என்று விசாரிக்கிறார்கள். பழனிக்கு கடை இருக்கும் இடம் தெரியவில்லை. பின் இதைப்பற்றி கேட்பதற்காக பழனி தன்னுடைய அண்ணன்கள் வீட்டுக்கு வருகிறார். ஆனால், அவருடைய அண்ணன்கள் எதுவுமே சொல்லாமல் சர்ப்ரைஸ் என்று சொல்கிறார்கள். பின் பழனி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பின் அந்த கடை இருக்கும் இடம் பற்றி சொல்ல சொல்கிறார்கள். இதற்கு பழனி, எதற்கு அங்கு வைத்தீர்கள் என்று கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full