தன் அண்ணன்களின் சுயரூபத்தை அறிந்தாரா பழனி? ஆவேசத்தில் கொந்தளித்த பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 15/2/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' பழனிக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. பின் அப்பத்தா, பாண்டியன் சொன்ன காரணத்தினால் பழனியும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். பழனிக்கு நல்லபடியாக திருமணம் நடந்தது. பின் பழனி, பாண்டியன் குடும்பத்தை மேடைக்கு அழைத்தார். ஆனால், அவர்களை வரவிடாமல் பழனி அண்ணன்கள் தடுத்து விட்டார்கள். பிரச்சனை எதுவும் செய்ய வேண்டாம் என்று பாண்டியனும் ஓரமாக நின்று தன்னுடைய மச்சானின் கல்யாணத்தை பார்த்தார்.

இதையெல்லாம் பார்த்து கோமதிக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. பின் வீட்டிற்கு வந்த பாண்டியன் குடும்பம், பழனிக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பழனியும் அவருடைய அண்ணன்களும் வந்தார்கள். பழனியின் அண்ணன்கள் ரொம்ப கேவலமாக பாண்டியனை பேச, அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் பழனியை தன்னுடைய வீட்டிற்க்கே அவருடைய அண்ணன்கள் அழைத்து சென்றார்கள். நேற்று எபிசோட்டில் பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே பழனியின் திருமணத்தில் நடந்ததை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருந்தரல்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் பழனி, பாண்டியன் குடும்பத்தை நினைத்து கவலையில் இருந்தார். உடனே அவருடைய அண்ணன்கள், இனி நீ எங்கும் போகக் கூடாது. உனக்கு என்ன வேண்டும் என்றாலும் நாங்கள் செய்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், பழனி அதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் சென்று விட்டார். அதற்குப்பின் மாரி, சுகன்யாவை பற்றி தன் மாமியாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவள் ரொம்ப வாயாடி. அவருடைய வாய்க்கு யாருமே நிக்க முடியாது. அதனால் தான் நானே அவளிடம் சில வருஷமாக பேசுவதே இல்லை என்று சொன்னதை கேட்டு அப்பத்தா ரொம்பவே கவலைப்பட்டார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் கதிர்- செந்தில் இருவருமே பெண் வீட்டிற்கு சென்று நடந்ததை விசாரித்தார்கள். பழனி அண்ணன்கள் சொன்ன விஷயத்தை கேட்டு செந்தில்-கதிர் பயங்கரமாக கோபப்பட்டார்கள். பின் செந்தில், இதைப் பற்றி வீட்டில் சொன்னவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. கோபத்தில் கோமதி தன்னுடைய அண்ணன்களிடம் சண்டை போட போனார். உடனே பாண்டியன், தடுத்து நிறுத்தி அவன் வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்கட்டும். எதுவாக இருந்தாலும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று எல்லோரையும் சமாதானம் செய்து அனுப்பி விட்டார். அதற்குப்பின் பழனி போன் செய்து தன்னுடைய மச்சான்களிடம் பேசி இருந்தார். அவர்களுமே உண்மையை சொல்லாமல் நார்மலாக பேசி இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி - சுகன்யா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பழனி, சுகன்யாவிடம் சரியாக முகம் கொடுத்து கூட பேசாமல் தூங்கி விடுகிறார். இது அவருக்கு வருத்தமாக இருக்கிறது. பின் தங்களுடைய வேலை செய்யும் இடத்திற்கு பழனியை அவருடைய அண்ணன்கள் அழைத்து வருகிறார்கள். இதெல்லாம் பழனிக்கு பிடிக்கவே இல்லை. பின் அவர் உள்ளே சென்று விடுகிறார். அப்போது வந்த பாண்டியன், பழனியில் அண்ணன்களிடம் பெண் வீட்டில் சொன்ன விஷயத்தை கேட்டு சண்டை வாங்குகிறார்.

சீரியல் ட்ராக்:

ஆரம்பத்தில் அவர்களுமே ஏதேதோ சமாளிக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள். இதனால் பழனியின் அண்ணன்களுக்கும் பாண்டியனுக்கும் இடையே சண்டை நடக்கிறது. அப்போது பாண்டியனின் மகன்களும் அங்கு வந்து சண்டை போடுகிறார்கள். இருவருக்கும் இடையே அடிதடி அளவிற்கு சண்டை நடக்கிறது. இதையெல்லாம் உள்ளே நின்று கேட்ட பழனி கோபத்தில் தன் அண்ணன்களை திட்டி விட்டு அங்கிருந்து செல்கிறார். பழனி பின்னாடியே கதிர்- செந்தில் இருவருமே சென்று அவரை சமாதானம் செய்ய பார்க்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full