பழனியை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பும் பாண்டியன், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சுகன்யா, நீங்கள் இங்கு பிரச்சனை செய்தால் நான் கிளம்பி போய் விடுவேன் என்றெல்லாம் வழக்கம்போல சண்டை போட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பேசி புரிய வைத்தார்கள். ஆனால், பழனிக்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் தன்னுடைய அண்ணன்கள் கட்டாயத்தினால் கடைக்குள் செல்கிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன், சரவணன் வந்தார்கள். அப்போது பழனி, தனக்கு போட்டியாக கடை திறந்து இருக்கிறார் என்று பாண்டியன் தவறாக புரிந்து கொண்டார்.
சரவணன், பாண்டியன் இருவரையும் பார்த்துவிட்டு குமார் உள்ளே அழைத்தார். ஆனால், பாண்டியன் உள்ளே வராமல் பழனியை பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பழனிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. பின் தன் அண்ணன்கள் வற்புறுத்ததால் பழனி கடையை திறந்து விட்டார். சுகன்யா ரொம்ப சந்தோஷமாக இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு போன பாண்டியன், இவ்வளவு பெரிய துரோகத்தை உன் தம்பி செய்வான் என நினைத்து பார்க்கவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நம்முடைய கடைக்கு போட்டியாக தான் கடையை ஆரம்பித்திருக்கிறான் என்றெல்லாம் உண்மை தெரியாமல் பழனியை திட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பழனி வீட்டிற்கு வந்து விட்டார்.
அப்போது கோமதி, இப்படியா நீ நடந்து கொள்வது? நடிக்காதே, இவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரனா? உனக்கும் அண்ணன்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றெல்லாம் கோபமாக பேசி இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பழனிக்கு எதிராக பேசி இருந்தார்கள். அவர் தரப்பு நியாயத்தை யாருமே கேட்கவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி தன் தரப்பு நியாயத்தை சொல்ல வருகிறார். ஆனால், யாருமே கேட்கவில்லை. பாண்டியன், கோமதி, சரவணன் என்று வீட்டில் உள்ள எல்லோருமே மாற்றி மாற்றி பழனியை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். கோபத்தின் உச்சத்தில் சென்ற கோமதி, நீ இனிமேல் என் முகத்தில் முழிக்காதே. வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறார். பாண்டியனுமே வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். இதனால் பழனி ரொம்பவே மனமடைந்து விடுகிறார். கதிர், பழனிக்காக சப்போர்ட் செய்ய வருகிறார். ஆனால், பாண்டியன் கேட்க வில்லை. பின் மனமுடைந்து அங்கிருந்து பழனி கடைக்கு வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது முத்துவேல், என்ன நடந்தது என்று விசாரிக்கிறார். அதற்கு பழனி, பாண்டியனும் கோமதியும் தன்னை புரிந்து கொள்ளாததை பற்றி சொல்லி அழுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று சுகன்யா, பாண்டியன் குடும்பத்தை பற்றி மோசமாக பேசுகிறார். முத்துவேல், இனி உன் கடை வியாபாரத்தையும் குடும்பத்தையும் பார் என்று அறிவுரை எல்லாம் சொல்கிறார். இன்னொரு பக்கம் கோமதி, பழனி தனக்கு துரோகம் செய்துவிட்டான் என்று நினைத்து ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருக்கிறார். மீனா-ராஜி இருவருமே அப்படியெல்லாம் இருக்காது என்று பழனிக்கு சப்போர்ட்டாக பேச பார்க்கிறார்கள். ஆனால், கோமதி கேட்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.