வேதனையில் தவிக்கும் சரவணனுக்கு ஆறுதல் சொன்ன பழனி, பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாக்யா, எப்படியாவது உன்னை நான் அந்த வீட்டில் வாழ வைப்பேன் என்றார். அதற்கு தங்கமயில், மீனாவிற்கு விடாமல் போன் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மீனா போன் பேசி இருந்தார். அப்போது தங்கமயில், நான் உங்களுக்கு வேண்டாதவள் ஆகி விட்டேனா? என்னுடைய நிலைமையை யாரும் யோசிக்க இல்லையா என்றெல்லாம் அழுது புலம்பினார். ஆனால், மீனா எதுவுமே சொல்லாமல் போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் கடைக்கு சென்றார்கள்.
மீனா, தங்கமயிலை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தார். மீனாவை பார்த்தவுடன் தங்கமயில் ரொம்பவே கதறி அழுதார். தங்கமயில், நான் இனிமேல் அந்த வீட்டிற்கு வர முடியாதா? என்னை மன்னிக்க மாட்டார்களா? எனக்கு விவாகரத்து வேண்டாம். இவர்கள் சொன்ன பொய்யால் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம் கதறி அழுதார். மீனாவால் எதுவுமே பேச முடியவில்லை. தங்கமயிலுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சொன்னார். இன்னொரு பக்கம் சரவணன், பாண்டியன் இருவரும் கடைக்கு வந்து விட்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது டீக்கடையில் சரவணன், பாண்டியன் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அதை பார்த்த சக்திவேல், வேண்டும் என்று பாண்டியன் குடும்பத்தை கேவலப்படுத்தி தனக்கு தெரிந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார். பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் சரவணன், வாழ்க்கை நினைத்து கோமதி அழுது கொண்டிருந்தார். பின் கதிர்- ராஜி இருவருமே கோமதிக்கு ஆறுதல் சொன்னார்கள். இருந்தாலும் கோமதியின் மனது கேட்கவில்லை. தன் மகனின் வாழ்க்கை என்ன ஆகுமோ? என்ற கவலையில் இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி, சரவணன் நிலைமையை நினைத்து ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார். சுகன்யா வேண்டும் என்று பாண்டியன் குடும்பத்தை குறை சொல்கிறார். ஆனால், பழனி அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. பின் பழனி, சரவணனுக்கு போன் செய்கிறார். சரவணன் எடுக்க வில்லை. அப்போது கதிர், போன் எடுத்து பேசுங்கள். மாமா உங்களிடம் பேச விரும்புகிறார் என்று சொல்கிறார். சரவணன், நேரடியாக பழனி கடைக்கு வந்து விடுகிறார். சரவணனை பார்த்தவுடன் பழனிக்கு எமோஷனல் ஆகி அழுகிறார். பின் சரவணன், நடந்தது எல்லாம் பழனியிடம் சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டு பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
பழனியும் சரவணனுக்கு ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் எங்கே? ஒன்னும் பிரச்சனை இல்லையா? என்று கேட்கிறார். அதற்கு கதிர், அதெல்லாம் ஒன்றும் இல்லை. அண்ணன் டீ கடைக்கு போயிருக்கிறார் என்று சமாளிக்கிறார். அதற்குப்பின் கடைக்கு வந்த சரவணன், பழனி மாமாவிடம் பேசினேன். அவர் தனியாக சந்தித்து பேசலாம் என்று சொல்லி இருக்கிறார். நீயும் என்னுடன் வா? என்று கதிரை அழைக்கிறார். அவரும் சரி என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.