வேதனையில் இருக்கும் பழனியின் நிலையை அறிவாரா கதிர்? காதலில் மூழ்கிய அரசி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 7/3/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' செந்தில்- மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, எப்படி பணத்தை ரெடி பண்ண முடியும். நீங்கள் எதற்கு ஒத்துக் கொண்டீர்கள். இரண்டு மூன்று முறை தேர்வு எழுதினால் கண்டிப்பாக பாஸாகி விடலாம் என்று சொன்னார். அதற்கு செந்தில், ஒவ்வொரு நாளும் அப்பாவிடம் பணத்திற்காக கைகட்டி நிற்க முடியாது. எனக்கு என்று தனி சம்பளம் வேண்டும் என்று சொன்னார். இன்னொரு பக்கம் தங்கமயிலின் நிலைமையை நினைத்து அவருடைய அம்மா- அப்பா இருவரும் ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.

இன்னொரு பக்கம் தங்கமயில், ஹோட்டலில் வேலை தெரியாமல் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து அந்த ஓனர் திட்டி இருந்தார். உடனே தங்கமயில் பயத்தில் பரபரப்பாக வேலை செய்தார். இன்னொரு பக்கம் படம் பார்ப்பதற்கு சுகன்யா ரெடியாகி பழனிக்கு போன் பண்ணி அழைத்தார். அதற்கு பின் பழனி, பாண்டியன் இடம் அனுமதி வாங்கி போனார். ஆனால், பாண்டியன் டிக்கெட்டுக்கு மட்டும் காசு கொடுத்து அனுப்பி இருந்தார். இதையெல்லாம் பார்த்து செந்திலுக்கு கோபம் வந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் அரசி- குமார் இருவரும் பேசி கொண்டு இருந்தார்கள். யாராவது பார்த்து விடுவார்களோ என்று அரசி பயந்தார். ஆனால், குமார் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் அரசியை அழைத்து கொண்டு பைக்கில் ஊர் சுற்றி இருந்தார். அந்த வழியாக பைக்கில் பழனி-சுகன்யா வந்தார்கள். உடனே அரசி ஒழிந்து கொண்டார். ஆனால், சுகன்யா பார்த்து விட்டார். பின் பயத்தில் அரிசி வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது கோமதி, ஏன் இவ்வளவு? என்று கேட்க, ஏதேதோ சொல்லி அரசி சமாளித்தார். இருந்தாலுமே கோமதிக்கு அரசி மீது சந்தேகம் வந்தது.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் பழனி, சுகன்யாவை தியேட்டருக்கு அழைத்து சென்றார். அது சின்ன தியேட்டர் என்பதால் சுகன்யா அங்கேயே சண்டை போட்டார். பழனி எடுத்து சொல்லியும் சுகன்யா கேட்கவே இல்லை. அதோடு பழனியிடம் 500 ரூபாய் தான் இருக்கிறது என்று சொன்னவுடன் பொது இடத்திலேயே ருத்ர தாண்டவம் ஆடி, சினிமாவே வேண்டாம் என்றார். பின் பழனி அண்ணன்கள் வீட்டிற்கு சென்ற சுகன்யா, தியேட்டருக்கு சென்ற கதையை சொன்னார். உடனே அவர்கள் பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசி இருந்தார்கள். பழனிக்கு பயங்கரமாக கோபம் வந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுகன்யா, முறைத்துக்கொண்டே நான் வரவில்லை என்கிறார். பழனியால் எதுவும் பேசாமல் அங்கிருந்து வந்து விடுகிறார். பின் பாண்டியன் வீட்டில் படம் பார்க்கவில்லையா? இதற்கு தான் கிளம்பினாயா? என்றெல்லாரும் கேள்வி கேட்கிறார்கள். பழனி, உண்மை எதுவுமே பேச முடியாமல் தயங்கி இருந்தார். பழனியின் நிலைமை புரிந்து கொண்டு கதிர்- செந்தில் இருவருமே அவருக்கு சப்போர்ட் செய்து பேசி இருக்கிறார்கள். ஆனால், வழக்கம்போல் பாண்டியன் எல்லோரையும் திட்டிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப் பின் மாடியில் கதிர்,செந்தில், சரவணன், பழனி நான்கு பேருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். கவலை எல்லாம் மறந்து பழனி சந்தோஷமாக இருக்கிறார். ஆனால், கதிருக்கு பழனியின் நடவடிக்கையில் சந்தேகம் வருகிறது. இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் போன் பேசினார். அப்போது அவர், நீ கர்ப்பமானால் வேலைக்கு நிறுத்தி விடுவார்கள். அதற்கான ஏற்பாடு செய் என்கிறார். இன்னொரு பக்கம் அரசி படிப்பதாக சொல்லி எதிர் வீட்டில் இருக்கும் குமாரிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். இதை சுகன்யா பார்த்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full