தீபாவளி சீர் நினைத்தும் வருத்தப்படும் கோமதி, பழனி செய்த விஷயம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, நான் சீக்கிரமாகவே என் மாமியார் வீட்டுக்கு சென்று விடுவேன் என்று சொல்வதால் மீனாவின் அம்மாவிற்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் செந்தில், என்ன பிரச்சனை நடந்தாலும் இந்த வீட்டை விட்டு நான் போக மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். அதற்குப்பின் பழனி- சுகன்யா இருவருமே முத்துவேல் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்போது சுகன்யா, பணம் காணவில்லை என்று பாண்டியன் திட்டிய விஷயத்தை எல்லாம் சொன்னவுடன் சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டு சண்டை போட்டார்.
காந்திமதி பழனிக்கு ஒரு மளிகை கடையை ஆரம்பித்துக் கொடுங்கள் என்று சொல்வதால் சுகன்யா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்கு பின் ராஜி -அரசி இருவருமே ரோட்டில் வந்து கொண்டிருக்கும் போது குமார் மன்னிப்பு கேட்டார். ஆனால், அரசி கோபப்பட்டு திட்டி அனுப்பி விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு மீனா வந்திருந்தார். ராஜி, கோமதி எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பின் கோமதி, வீட்டில் தங்க சொன்னார். அந்த சமயம் பார்த்து செந்தில் போன் செய்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்து சமைத்து விடு என்றார். இதனால் மீனா, நான் இங்கேயே தங்கி விட்டு வரச் சொல்லி செந்தில் சம்மதம் சொல்லிவிட்டார் என்று பொய் சொன்னார். அரசி- ராஜி இருவரும் சந்தோஷப்பட்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்று எபிசோட்டில் வேலை முடித்துவிட்டு நேராக செந்தில் வீட்டிற்கு போகிறார். ஆனால், அங்கு மீனா இல்லை. செந்தில் போன் செய்கிறார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. பின் கோமதிக்கு போன் செய்து மீனாவை பற்றி செந்தில் விசாரிக்கிறார். இதனால் செந்திலுமே பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். பின்
செந்தில், நான் மீனாவை இங்க தங்க சொல்லவே இல்லை. எதற்காக நான் இங்கு தங்க சொன்னதாக பொய் சொல்லி வைத்திருக்கிறாய்? வீட்டிற்கு வர விருப்பம் இல்லையா? என்று கேட்கிறார். அதற்கு மீனா, எனக்கு நீங்கள் வேலை மேல் வேலை வைத்தீர்கள். எனக்கு அதை செய்ய முடியவில்லை.
சீரியல் ட்ராக்:
அதனால் தான் நான் இங்கே வந்துவிட்டேன் என்று சொல்கிறார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. இதை பார்த்த கோமதி, செந்திலை திட்டுகிறார். பின் மீனா வழக்கம் போல் ராஜியிடம் பேச சென்று விடுகிறார். அதற்குப்பின் செந்தில் தன்னுடைய அண்ணன்களுடன் சேர்ந்து ஜாலியாக இருக்கிறார்.
மறுநாள் காலையில் பயிற்சிக்காக கதிர், ராஜியை அழைத்துக் கொண்டு கிரவுண்டுக்கு வந்திருக்கிறார். அப்போது ராஜி செய்யும் அட்ராசிட்டியால் கதிருக்கு கோபம் வருகிறது. பின் ராஜியை திட்டிவிட்டு கதிர் அங்கிருந்து சென்று விடுகிறார்.
https://youtu.be/HoVn4pqi6sk?si=uQZcoYbkx3V6Movp
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் பாண்டியன் வீட்டிற்கு வந்திருக்கும் மருமகள்கள் எல்லோருக்குமே தீபாவளி பண்டிகைக்கு சீர்வரிசை கொடுத்திருக்கிறார்கள். இதை பார்த்து ராஜி, கோமதி இருவருமே வருத்தப்படுகிறார்கள். பாண்டியன் ஆறுதல் சொல்கிறார். இருந்தாலுமே கோமதி ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப்பின் பழனி, ராஜி- கோமதி இருவருக்குமே தீபாவளி பண்டிகைக்கு சீர்வரிசை கொடுக்கிறார். இதை பார்த்து கோமதி எமோஷனலாக அழுகிறார்.