சுகன்யாவை வெளுத்து வாங்கிய பழனி, பாண்டியன் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் எல்லோருக்குமே பரோட்டா, சிக்கன் வாங்கி வந்திருந்தார். பின் எல்லோரையும் உட்கார வைத்து ஒவ்வொருவருக்குமே கையில் சாப்பாடு கொடுத்தார் பாண்டியன். அதற்கு பின் பாண்டியன், நீ எப்படி குமார் இடத்திற்கு போனாய்? என்று கேட்டார். அரசியால் எதுவுமே பேச முடியவில்லை. அப்போது மீனா, ராஜி இருவருமே இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் சுகன்யா தான் என்று சொல்லிவிட்டார்கள். சுகன்யா ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை அரசி வாழ்க்கையில் செய்ததை ஒன்று விடாத சொன்னார்கள்.
சுகன்யாவும் இல்லை என்று சமாளித்தார். இருந்தாலுமே சுகன்யா சொல்வதில் உண்மை இல்லை என்பது பாண்டியன் குடும்பத்திற்கு தெரிந்தது. அப்போது மீனா, குமார் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை காட்டி மிரட்டியதனால் தான் சுகன்யா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அரசியை கொண்டு போய்விட்டார். அதற்கு பின் குமாரை கல்யாணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்தியதும் சுகன்யா தான் என்று அடுக்கடுக்காக சுகன்யா மீதான குற்றசாட்டுகளை சொன்னார்கள். இதனால் பாண்டியன் குடும்பமே ஷாக் ஆனது. கோபத்தில் பழனி, சுகன்யாவை திட்டி இருந்தார். அதற்குப்பின் கோமதி, சுகன்யாவிடம் பேச வந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோமதி, இவர்கள் சொல்வது உண்மையா அரசி? என்று கேட்டார். சுகன்யா, இவர்கள் என் மீது வீண்பழி போட்டார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சமாளித்தார். உடனே அரசி, அண்ணி சொன்னது தான் உண்மை. அத்தையால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிந்தது என்று சொன்னார். கொந்தளித்த கோமதி, சுகன்யா கன்னத்தில் பளார் பளார் என்று அடித்தார். சுகன்யாவால் எதுவுமே பேச முடியவில்லை. கோமதி, என் குடும்பம் உனக்கு என்ன துரோகம் செய்தது.
கடந்த வாரம் எபிசோட்:
உனக்கு நாங்கள் நல்லது தானே நினைத்தோம் என்று மீண்டும் அடித்தார். அதற்குப்பின் பாண்டியன், பழனி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பழனி, அவளை கல்யாணம் செய்து கொண்டு வந்த நாளிலிருந்து இப்படித்தான் நடந்து கொண்டார். என்னிடம் எப்போதுமே சண்டை வாங்கிக் கொண்டுதான் இருந்தார். இரவு முழுவதும் என்னை தூங்க விடுவதில்லை. எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். என்னுடைய வாழ்க்கையே போய்விட்டது என்று புலம்பினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், செந்தில் இருவருமே குமார் மீது பயங்கரமாக கோவப்பட்டு பேசுகிறார்கள். அதற்கு பாண்டியன், நான் போலீசில் சொல்கிறேன். குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்வதால் கதிர் அமைதியாகி விடுகிறார். அதற்குப்பின் ரூமிற்கு சென்ற பழனி இடம் சுகன்யா வேண்டும் என்று வம்பு இழுக்கிறார். இதனால் கோபப்பட்ட பழனி, என்னை பற்றி தான் எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. இனிமேல் என்னை பயமுறுத்தும் வேலை வைத்துக் கொள்ளாதே. உன்னை திருமணம் செய்த நாளில் இருந்து இப்போது வரை நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.
சீரியல் ட்ராக்:
என்னை கஷ்டப்படுத்தினால் தாங்கி கொள்வேன். ஆனால், என் குடும்பத்திற்கு ஒன்று என்றால் தாங்கி கொள்ளமாட்டேன். உனக்கு இங்க பிடிக்கவில்லை என்றால் இந்த வீட்டை விட்டு கிளம்பு என்று சுகன்யாவை எதிர்த்து பேசுகிறார். இதனால் சுகன்யாவில் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் பாண்டியன், சுகன்யாவை அழைத்து பேசுகிறார். இதை பார்த்து கோமதிக்கு இன்னும் கோவம் அதிகமாகின்றது. அப்போது பாண்டியன், இனிமேல் இந்த வீட்டில் நீ எந்த தவறும் செய்யக்கூடாது. இந்த வீட்டிற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். அதேபோல் கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம்தான். ஆனால், பழனிக்கு நீ கொடுக்க வேண்டிய மரியாதை கொடுத்தது தான் தீர வேண்டும் என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு சுகன்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.