பழனியின் மண்டையை சலவை செய்யும் சுகன்யா, மீனா சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 8/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சுகன்யா, சக்திவேல் வீட்டிற்கு சென்று மீனா-செந்தில் இருவரும் தனியாக போவதை பற்றி சொன்னார். அப்போது வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஷாக்காக இருந்தாலும் சக்திவேல் ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் அப்பத்தாவின் 75வது பிறந்தநாள் வருவதால் அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முத்துவேல் சொன்னார். இன்னொரு பக்கம் கடையில் தங்கமயில், முட்டையை மடித்து தருவதாக சொல்லி தெரியாமல் விழித்து நின்றார். அந்த சமயம் வந்த மாணிக்கம், முட்டையை நான் மடிக்கிறேன் என்று வாங்கி உடைத்து விட்டார். இதை பார்த்து சரவணனுக்கு பயங்கர கோபம் வந்தது.

நேற்று எபிசோட்டில் சரவணன், உங்களுக்கு தெரியாத வேலை எல்லாம் எதற்காக செய்கிறீர்கள் என்று கோவப்பட்டார். உடனே மாணிக்கம் ஏதேதோ சொல்லி சமாளித்தார். .பழனிவேல் செய்து விடுவார். நீ அமைதியாக இரு என்று சொல்வதால் சரவணனுக்கு இன்னும் கோபம் ஆனது. ஆனால், பழனி எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் நிறைய ஆர்டர் இருப்பதால் சரவணன் கிளம்ப போனார். மாணிக்கம், பழனி செய்யட்டும் என்று அவரை ஒரு வேலைக்காரர் போல சொன்னார். இதெல்லாம் பார்த்து சரவணனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் சக்திவேல் வீட்டிற்கு பழனி சென்று இருந்தார். அப்போது முத்துவேல், புதிதாக மளிகை கடை ஆரம்பித்து தருகிறோம். அதை பார்த்துக்கொள் என்று சொன்னார்கள். பழனிவேல் ஷாக்கில் அதெல்லாம் வேண்டாம் என்றார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய அப்பா-அம்மாவை பார்க்க சென்றிருந்தார். அப்போது அவர்கள் புது வீட்டிற்கு போவதை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால், வழக்கம் போல மீனா அதில் விருப்பம் இல்லாத போலவே பேசி இருந்தார். இருந்தாலும் அவருடைய அப்பா- அம்மா கேட்கவில்லை. செந்திலைப் போலவே அவர்களும் மீனாவை கட்டாயப்படுத்தினார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் பழனி, கடை எதுவும் வேண்டாம். நான் பாண்டியன் கடையிலேயே வேலை செய்கிறேன் என்கிறார். உடனே முத்து வீட்டில் உள்ள எல்லோருமே தனியாக கடை வைத்து சம்பாதிக்க பாரு. அதில் ஒன்றும் தப்பு இல்லை என்று சொல்கிறார்கள். அப்பத்தா, கோமதி- பாண்டியன் எதுவும் கோபப்பட மாட்டார்கள். நான் சொல்லிக் கொள்கிறேன். நீ கடையை பார்த்துக் கொள் என்றெல்லாம் சொல்வதால் பழனி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் புது வீட்டில் பால் காய்ச்ச போவதால் தேவையான பொருட்களை எல்லாம் கோமதி வாங்கி வருகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே செந்தில்- மீனா வீட்டை விட்டு போவது நினைத்து ரொம்ப எமோஷனலாக அழுது பேசி புலம்புகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பின் சுகன்யா, பழனி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சுகன்யா, நாமும் தனிகுடுத்தனும் போகலாம். உங்கள் அண்ணாவைத் தரும் கடையை பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு யாரும் உங்களை மதிக்கவில்லை. உங்களிடம் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை என்று எல்லாம் சொல்வதால் பழனி மனம் மாறுகிறது. பின் பழனி, கடையில் மாணிக்கம் சொன்னது எல்லாம் யோசித்துப் பார்க்கிறார். இன்னொரு பக்கம் பால் காய்ச்சும் போது வீட்டில் வருபவர்களுக்கு சாப்பாடு வாங்கி தருவதற்கு பணம் வேண்டும் என்று மீனாவிடம் சொன்னார். மீனா, எதுவாக இருந்தாலும் நீங்கள் தான் பார்த்துக் கொள்ளணும் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full