ஆவேசத்தில் பழனி எடுத்த முடிவுக்கு பாண்டியன் என்ன சொல்ல போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 17/2/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' பழனிக்கு நல்லபடியாக திருமணம் நடந்தது. வீட்டிற்கு பழனியும் அவருடைய அண்ணன்களும் வந்தார்கள். பழனியின் அண்ணன்கள் ரொம்ப கேவலமாக பாண்டியனை பேச, அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் பழனியை தன்னுடைய வீட்டிற்க்கே அவருடைய அண்ணன்கள் அழைத்து சென்றார்கள். நேற்று எபிசோட்டில் பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே பழனியின் திருமணத்தில் நடந்ததை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள்.

இன்னொரு பக்கம் பழனி, பாண்டியன் குடும்பத்தை நினைத்து கவலையில் இருந்தார். உடனே அவருடைய அண்ணன்கள், இனி நீ எங்கும் போகக் கூடாது. உனக்கு என்ன வேண்டும் என்றாலும் நாங்கள் செய்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், பழனி அதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் சென்று விட்டார். அதற்குப்பின் மாரி, சுகன்யாவை பற்றி தன் மாமியாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவள் ரொம்ப வாயாடி. அவருடைய வாய்க்கு யாருமே நிக்க முடியாது. அதனால் தான் நானே அவளிடம் சில வருஷமாக பேசுவதே இல்லை என்று சொன்னதை கேட்டு அப்பத்தா ரொம்பவே கவலைப்பட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் கதிர்- செந்தில் இருவருமே பெண் வீட்டிற்கு சென்று நடந்ததை விசாரித்தார்கள். பழனி அண்ணன்கள் சொன்ன விஷயத்தை கேட்டு செந்தில்-கதிர் பயங்கரமாக கோபப்பட்டார்கள். பின் செந்தில், இதைப் பற்றி வீட்டில் சொன்னவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. கோபத்தில் கோமதி தன்னுடைய அண்ணன்களிடம் சண்டை போட போனார். உடனே பாண்டியன், தடுத்து நிறுத்தி அவன் வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்கட்டும். எதுவாக இருந்தாலும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று எல்லோரையும் சமாதானம் செய்து அனுப்பி விட்டார். அதற்குப்பின் பழனி போன் செய்து தன்னுடைய மச்சான்களிடம் பேசி இருந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

அவர்களுமே உண்மையை சொல்லாமல் நார்மலாக பேசி இருந்தார்கள். நேற்று எபிசோட்டில் பழனி - சுகன்யா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பழனி, சுகன்யாவிடம் சரியாக முகம் கொடுத்து கூட பேசாமல் தூங்கி விட்டார். இது அவருக்கு வருத்தமாக இருந்தது. பின் தங்களுடைய வேலை செய்யும் இடத்திற்கு பழனியை அவருடைய அண்ணன்கள் அழைத்து வந்தார்கள். இதெல்லாம் பழனிக்கு பிடிக்கவே இல்லை. பின் அவர் உள்ளே சென்று விட்டார் அப்போது வந்த பாண்டியன், பழனியின் அண்ணன்களிடம் பெண் வீட்டில் சொன்ன விஷயத்தை கேட்டு சண்டை வாங்கி இருந்தார்.

சீரியல் ட்ராக்:

ஆரம்பத்தில் அவர்களுமே ஏதேதோ சமாளித்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். இதனால் பழனியின் அண்ணன்களுக்கும் பாண்டியனுக்கும் இடையே சண்டை நடந்தது. அப்போது பாண்டியனின் மகன்களும் அங்கு வந்து சண்டை போட்டார்கள். இருவருக்கும் இடையே அடிதடி அளவிற்கு சண்டை நடந்தது. இதையெல்லாம் உள்ளே நின்று கேட்ட பழனி கோபத்தில் தன் அண்ணன்களை திட்டி விட்டு அங்கிருந்து சென்றார். பழனி பின்னாடியே கதிர்- செந்தில் இருவருமே சென்று அவரை சமாதானம் செய்ய பார்த்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபத்தில் சுகன்யா, வீட்டில் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சொத்து விவரத்தை பேசுகிறார். இதைக் கேட்டு அப்பத்தா ஷாக் ஆகிறார். அந்த சமயம் பார்த்து கோபத்தில் வீட்டிற்கு வந்த பழனி, துணிகளை எல்லாம் பேக் செய்து சுகன்யாவுடன் வீட்டை விட்டு கிளம்புகிறார். அப்பத்தா, என்ன பிரச்சனை? என்று கேட்டதற்கு, பழனி நடந்ததை சொல்கிறார். அந்த சமயம் பார்த்து அவருடைய அண்ணன்களும் வந்து விடுகிறார்கள். அவர்களுமே தாங்கள் செய்த தவறை ஒற்றுக் கொள்கிறார்கள். இதனால் அப்பத்தா ரொம்பவே கோபப்பட்டு தன்னுடைய மகன்களை திட்டுகிறார். பின் பழனி, பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full