பாண்டியன் சொன்ன வார்த்தையால் கதிகலங்கிய தங்கமயில், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 10/12/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜியிடம், தங்கமயில் தன் பக்கம் இருக்கும் ஞாயத்தை எடுத்து சொல்லி புரிய வைத்தார். அப்போது கோமதி, உன்னை மாதிரி ஒரு மோசக்காரியை நான் பார்த்ததே இல்லை. என் பிள்ளைகளுக்கு என்று ஒரு பிரச்சனை என்றால் நான் சும்மா விடமாட்டேன். நீ இவ்வளவு கேடுகெட்டவள்ளா? என்று தங்கமயிலை ரொம்ப மோசமாக பேசி திட்டி விட்டார்.

தங்கமயில் மேதனையில் இருந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே தூங்கி விட்டார்கள். பாண்டியன், சரவணன் நிலைமையை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். கோமதியும் ஆறுதல் சொன்னார். இருந்தாலுமே பாண்டியன், சரவணன் நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டார். காலை பொழுது விடியட்டும். எதுவாக இருந்தாலும் பேசி முடிவெடுக்கலாம் என்று கோமதி சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

ராஜி-கதிர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், சரவணன்நிலைமையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அதற்கு ராஜி, தங்கமயில் கொண்டு வந்திருக்கும் நகைகளும் போலி தான். ஆனால், வீட்டில் யாருக்குமே தெரியாது. இந்த விஷயம் எனக்கும் மீனா அக்காவிற்கும் தான் தெரியும் என்றார். இதை கேட்டு கதிருக்கு இன்னும் ஷாக் ஆனது. அதற்குப் பிறகு வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பின் கதிர்- ராஜி இருவருமே கிளம்பி செந்தில்- மீனா வீட்டிற்கு போனார்கள்.

இன்றைய எபிசோட்:

சரவணன், தங்கமயிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல செந்தில், தன்னுடைய தந்தையை தான் குறை சொல்லிக் கொண்டிருந்தார். பின் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் எல்லோருமே குழம்பிப் போய் இருந்தார்கள். கோமதி, தங்க மயிலை திட்டிக்கொண்டு இருந்தார். அந்த சமயம் பார்த்து வெளியே வந்த தங்கமயில், பாண்டியன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க போனார். உடனே பாண்டியன் தன்னுடைய காலை நகர்த்திக் கொண்டார்.

சீரியல் ட்ராக்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில் தான் செய்த தவறுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு கதறி அழுகிறார். ஆனால், வீட்டில் யாருமே மன்னிப்பதாக இல்லை. கோமதி, தங்கமயில் செய்த துரோகத்திற்காக கொந்தளிக்கிறார். சரவணன் எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருக்கிறார். பின் பாண்டியன், தங்கமயிலின் அப்பா, அம்மாவிற்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வர சொல்கிறார். என்ன நடக்குமோ என்ற பயத்தில் தங்கமயில் அழுது கொண்டு இருக்கிறார். அந்த சமயம் பார்த்து சரவணன் அக்கா வீட்டிற்கு வருகிறார். அவர் தங்கமயிலையும் அவருடைய குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full