ராஜியால் கோமதி வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல், பாண்டியன் எடுத்த முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 28/1/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, சுகன்யா பேசியதற்கு கோபப்படாமல் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே போனார். சக்திவேல் ஏதாவது பிரச்சனையை செய்ய வேண்டும் என்று நக்கலாகவே பாண்டியன் குடும்பத்திடம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், முத்துவேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டார்கள். ஆனால், இது சக்திவேலுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.

சக்திவேல், ராஜியை கல்யாணம் செய்து கொள்ளாமல் அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் விட்டிருக்கலாம். ஆனால், சொத்துக்காக தான் கதிர் இப்படி எல்லாம் வேலை செய்திருக்கிறான் என்று மோசமாக பேசி இருந்தார். இதைக் கேட்டு கொந்தளித்த கோமதி, இந்த திருமணத்திற்கும் கதிருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் என் மகன் காலில் விழுந்து கெஞ்சியதால் தான் கதிர் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான். என் அண்ணன் வீட்டு குடும்பம் அசிங்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் நான் இப்படி ஒரு முடிவெடுத்தேன் என்று எல்லா உண்மையும் சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதைக் கேட்டு பாண்டியன் ஷாக் ஆனார். கோபத்தில் சக்திவேல்- முத்துவேல் இருவரும் கோமதியிடம் சண்டை போட்டு வெளியே போனார்கள். பின் கோமதி, பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டார். பாண்டியன், உடைந்த உறவை ஒட்ட வைக்க முடியாது என்று திட்டி விட்டு கோபமாக வெளியே போனார். பின் செந்தில், கோமதி- மீனா இருவரையும் திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கதிர், தன் அப்பாவிடம் தன் அம்மா தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், பாண்டியனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர் எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே பாண்டியன் கேட்க வில்லை. கோமதியின் மீது பயங்கரமாக கோபத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் செந்தில், தன்னுடைய அம்மாவை திட்டி விட்டு மீனாவை வீட்டிற்கு அழைத்து வருகிறார். வீட்டில் வந்த பின் செந்தில் ரொம்ப கடுமையாக பேசுகிறார். மீனா, நானும் அத்தையும் எந்த தவறும் செய்யவில்லை. அந்த சூழ்நிலை அப்படி இருந்தது என்று எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். இருந்தாலுமே செந்தில் கேட்கவில்லை. இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த பாண்டியனிடம் கோமதி மன்னிப்பு கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:

பாண்டியன், நான் உண்மையாக இருக்கிறேன். ஆனால், எனக்கு யாரும் உண்மையாக இருக்கவில்லை. உடைந்து போன உறவை ஒட்டி வைக்க முடியாது என்று திட்டிவிட்டு செல்கிறார். இதனால் கோமதி ரொம்பவே வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் ராஜி, தன்னால் தான் பிரச்சனை நடந்தது என்று வருத்தப்படுகிறார்.
ராஜிக்கு, கதிர் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full