நடு தெருவில் பாண்டியன் செய்த அலப்பறை, கோபத்தில் கொந்தளிக்கும் கோமதி அண்ணன்கள்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனா, வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, சக்தி இருவரும் ஆக்கிரமிப்பு இடம் சம்மந்தமாக தகராறு செய்தார்கள். அதற்கு மீனா, பதிலடி கொடுக்க, கோபத்தில் அவர்கள் மீனாவை மிரட்டி விட்டு சென்றார்கள். இன்னொரு பக்கம் திருடனுக்கு பயந்து வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தி அதை பார்த்து ரசித்து சந்தோஷப்பட்டு இருந்தார் பாண்டியன். பின் ராஜி, கண்ணனை துரத்தும் வீடியோவை கதிர் பார்த்து கொண்டிருந்தார். அப்போது ராஜியின் ஓட்டத்தை பார்த்து கதிர் வியந்து பேசி இருந்தார்.
அதற்கு ராஜி, நான் அத்தலட் பிளேயர். எனக்கு போலீசாக வேண்டும் என்று தான் ஆசை என்று சொன்னவுடன் கதிர் ஆச்சரியப்பட்டார். பின் அவரை கிரவுண்டுக்கு அழைத்து சென்ற கதிர், ராஜியிடம் பந்தயம் வைத்து இருந்தார். அதில் ராஜி வெற்றி பெற்று இருந்தார். ராஜியின் ஓட்டத்தைக் கண்டு பிரமித்து போன கதிர், நீ எப்படியாவது போலீசாக வேண்டும். நான் உன்னை போலீஸ் ஆக்குகிறேன் என்று சப்போர்ட்டாக பேசி இருந்தார் . பின் பாண்டியன், பழனிக்கு பெண் பார்த்து இருக்கிறேன். நல்ல குடும்பம், பெண் நல்ல படித்திருக்கிறார். மரியாதை தெரிந்த பெண்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பெண் பார்க்க வீட்டிற்கு போகலாம் என்று சொன்னவுடன் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பழனி, குஷியில் வெட்கப்பட்டார். பின் இதைப்பற்றி பழனி, தன் அண்ணன்கள் இடம் சொல்ல, அவர்கள் பயங்கரமாக கோபப்பட்டு சண்டை போட்டு இருந்தார்கள். உடனே பழனி, எனக்கு எந்த சொத்தும் வேண்டாம். நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில், ஸ்கூலில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த தலைமை ஆசிரியர், மற்ற ஆசிரியர் பார்த்து தங்கமயில் பயந்தார்.
நேற்று எபிசோட்:
பின் தங்கமயில் எடுக்கும் பாடத்தை மீனா, ராஜி ரசித்து பார்த்துக் பாராட்டி இருந்தார்கள். நேற்று எபிசோட்டில் பாண்டியன் குடும்பத்தினர் பழனிக்கு பெண் பார்க்க அலப்பறை செய்து இருந்தார்கள். பழனியை அழகாக ரெடி பண்ணி பெண் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். பின் அங்கு பாண்டியன், தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு பெருமையாக பழனியை பற்றி பேசி இருந்தார். அதற்கு பின் பெண்ணை அழைத்து வந்தார்கள். மஞ்சுளாவை எல்லோருக்கும் பிடித்து விட்டது.
இன்றைய எபிசோட்:
பின் பெண்ணை பார்த்தவுடன் பழனிக்கு ரொம்ப பிடித்து விட்டது. இன்னொரு பக்கம் பழனியின் அண்ணன்கள், எப்படியும் அவனுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். அவனை கேலி செய்து அனுப்பி விடுவார்கள் என்று கிண்டலாக பேசி இருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தனியாக பழனி- மஞ்சுளாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் இருவருக்குமே பிடித்து போனதால் வீட்டில் ஒப்பந்தம் பேசி நிச்சயதார்த்தம் வரை பேசி முடிக்கிறார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாண்டியன் வெளியில் நின்று, பழனிக்கு பெண் வீட்டில் முடிந்துவிட்டது.
சீரியல் ட்ராக்:
இன்னும் நான்கு நாட்களில் நிச்சயதார்த்தம். அண்ணன்கள் நிச்சயதார்த்தத்திற்கு வரலாம். என் தலைமையில் தான் கல்யாணம் என்று அவர்களை வெறுப்பேற்றும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கேட்டு அவர்கள் பயங்கரமாக கோபப்படுகிறார்கள். அதற்குப்பின் மீனா- ராஜி இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது என்னுடைய கனவை நிறைவேற்றி வைக்கிறேன் என்று கதிர், சொன்னதை ராஜி சொல்கிறார். மறுநாள் ரன்னிங் பிராக்டிக்ஸ்க்கு கதிர்- ராஜி போகிறார்கள். அங்கு ராஜி கஷ்டப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறார் கதிர். இத்துடன் சீரியல் முடிகிறது.