தங்கமயிலை ஏற்றுகொள்ளுமா பாண்டியன் குடும்பம்? மாமனாருக்கு சப்போர்ட் செய்யும் கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில் சொன்ன வார்த்தையால் கடுப்பாகிய கோமதி, மீனாவிற்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வர வைத்தார். மீனா வீட்டிற்கு வந்தவுடன் பாண்டியன்- கோமதி இருவருமே மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் மீனா எல்லா உண்மையும் சொல்லி விட்டார். தங்கமயில் கர்ப்பமாக இருந்தார். அதனால் தான் நான் தங்க மயிலுடன் பேசுகிறேன். ஹாஸ்பிடலுக்கு நான் தான் அவருடன் போனேன். ஆனால், அவர் வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார்.
இந்த விஷயம் சரவணன் மாமாவிற்கு ஏற்கனவே தெரியும். ஆனால், அவர் அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டார் என்று நடந்த எல்லா உண்மையும் சொல்லிவிட்டார். இதை கேட்டு பாண்டியன் ஷாக் ஆனார். கோமதி, சரவணன் அப்படி சொல்லி இருக்க மாட்டான் என்று வேதனைப்பட்டார். பின் பாண்டியன், செந்திலை கடைக்கு போக சொல்லி சரவணனைஅழைத்து வர சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
ஹாஸ்பிடலில் முத்துவேலுக்கு எடுக்கப்படும் ட்ரீட்மென்ட் பற்றி டாக்டர் விவரமாக சொல்கிறார். பின் கதிர், முத்துவேலுக்கு ஆறுதல் சொல்லி தைரியப்படுத்தினார். இன்னொரு பக்கம் செந்தில், சரவணனை அப்பா வர சொன்னதாக சொல்லி வீட்டிற்கு போக சொன்னார். வீட்டிற்கு வந்தவுடன் கோமதி, தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை தெரிந்தவுடன் நீ என்ன சொன்னாய்? என்றார். மீனா, சரவணன் தங்கமயிலிடம் மோசமாக பேசியிருப்பதை அறிந்தவுடன் கோமதி, சரவணனை அடி வெளுத்து வாங்கினார். பாண்டியனுமே, சரவணனை ரொம்ப கடுமையாக திட்டினார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் கோமதி, ஒரு பக்கம் விவாகரத்து. இன்னொரு பக்கம் தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறாள். என்ன முடிவு எடுப்பது? என்று தெரியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று புலம்புகிறார். பாண்டியன், என்ன நடந்தாலுமே அது நம்ம வீட்டு வாரிசு என்றார். சரவணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின் கோமதி, என்ன செய்யலாம்? என்ன முடிவெடுக்க போகிறீர்கள்? என்றார். பாண்டியன், பொறுமையாக தான் யோசித்து முடிவு எடுக்கணும் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். தைரியமாக இருங்கள் என்று தன்னுடைய மாமனார் முத்துவேலுக்கு ஆறுதல் சொல்லி அழைத்து வருகிறார். இன்னொரு பக்கம் செந்தில், நீ அப்பாவாகிவிட்டாய். என்ன முடிவெடுக்க போகிறாய் என்று கேட்கிறார். சரவணன், எனக்கு தெரியவில்லை என்கிறார். அதேபோல் பாண்டியன்- கோமதி எல்லோருமே தங்கமயிலை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கதிர்- முத்துவேல் இருவரும் ஒன்றாக செல்வதை பார்த்து சக்திவேல், கதிரிடம் கேட்டு சண்டை வாங்குகிறார்.