கோமதி குடும்பத்தை காப்பாற்ற கோர்ட்டில் சாட்சி சொன்னாரா சக்திவேல்-முத்துவேல்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், தான் தவறு செய்து விட்டோமா? என்று வேதனையில் புலம்பி கொண்டிருந்தார். அப்போது பாக்கியா-மாணிக்கம் இருவருமே நீ எந்த தவறும் செய்யவில்லை. இது கடைசி பொய். இதுதான் உன் வாழ்க்கையை காப்பாற்றும் என்றெல்லாம் சொல்லி தங்கமயிலின் மூளையை செலவு செய்தார்கள். அந்த சமயம் பார்த்து பாக்கியா, சொன்ன வக்கீல் வீட்டிற்கு வந்து தங்கமயிலிடம் பொய் சொல்ல வேண்டும் என்றார். பாக்கியாவுமே தங்கமயிலிடம் கட்டாயப்படுத்தி பொய் சொல்ல வைத்தார்.
தங்கமயில் குடும்பத்தினர் கோர்ட்டுக்கு வந்து விட்டார்கள். அவர்களை பார்த்தவுடன் கோபத்தில் பழனி சண்டைக்கு போனார். தங்கமயில் வழக்கம்போல அழுது கொண்டிருந்தார். பாக்கியா, பழனியை மோசமாக திட்டினார். அதற்குப்பின் பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் போலீஸ் கோர்ட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். அரசி- ராஜி இருவரும் எமோஷனல் கதறி அழுதார்கள். போலீஸ் பாண்டியன் குடும்பத்தை கோர்ட்டுக்குள் அழைத்துச் செல்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அந்த இடத்தில் முத்துவேல்-சக்திவேல் இருப்பதை பார்த்த பாக்கியா, பாண்டியன் உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு கெடுதல் செய்திருப்பார். நீங்கள் எனக்கு சாதகமாக கோர்ட்டில் பேச வேண்டும் என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக ஏற்றி விட்டார். இதைக் கேட்ட சக்திவேல் சரி என்றார். பின் கோர்ட்டில் வாதம் நடக்கிறது. தங்கமயில், பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே வரதட்சனை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியதாக கொடுத்த புகார் எல்லாம் உண்மை என்று சொல்லி விட்டார். இதைக் கேட்டு பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோரும் சாக் ஆனார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் பாக்கியா, பாண்டியன் குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக புகார் சொல்கிறார். அதற்குப்பின் பாண்டியன் குடும்பத்து வழக்கறிஞர், அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். பின் விசாரணைக்கு வந்த பாண்டியன், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. என் மகளாகத்தான் பார்த்தேன். அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்கிறார். அதற்கு பின் விசாரணைக்கு வந்த சரவணன், ஆரம்பத்திலிருந்து இப்போது வரை அவர்கள் சொல்வது எல்லாமே பொய். அந்த பொய்யினால் தான் இப்ப பிரச்சனையில் வந்து நிற்கிறது. எனக்கு அவளுடன் சேர்ந்து வாழ விருப்பமே இல்லை என்று நடந்ததை எல்லாம் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதைக்கேட்டு தங்கமயில் எமோஷனலாக கத்தி அழுகிறார். பின் முத்துவேல்- சக்திவேல் இருவரையும் பொய் சாட்சி சொல்ல சொல்கிறார் பாக்கியா. ஆனால், கோர்ட்டில் முத்துவேல்- சக்திவேல் இருவரும் பாண்டியன் குடும்பத்திற்கு ஆதரவாக தான் பேசுகிறார்கள். இதனால் பாண்டியன் குடும்பத்திற்கு ஜாமீன் கிடைத்து விடுகிறது. ராஜி, அரசி, மீனா மூவருமே தங்கமயில் குடும்பம் நடந்து கொண்டதை நினைத்து கோபப்படுகிறார்கள். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனில் கோமதி, பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே கையெழுத்து போட்டு வெளியே வருகிறார்கள். அப்போது கோமதி எமோஷனலாக தன் அண்ணனை பார்த்து அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.