சரவணனின் வாழ்க்கையை நினைத்து புலம்பும் பாண்டியன், சக்திவேல் சொன்னது - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
சரவணனின் வாழ்க்கையை நினைத்து புலம்பும் பாண்டியன்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன் பார்த்து தங்கமயில் ஆச்சரியப்பட்டார். அப்போது சரவணன், உன் மீது நான் ரொம்பவே நம்பிக்கையும் பாசமும் வைத்து இருந்தேன், எல்லாத்தையும் நீ உடைத்து விட்டாய். உன்னால் என்னுடைய குடும்பம் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டது. குழந்தைக்கு எதுவும் ஆகாமல் நான் பார்த்துக்கொள்வேன். குழந்தைக்கு தேவையான எல்லா செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், குழந்தையை காரணம் காட்டி நீ என்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். உன்னுடன் சேர்ந்து வாழும் நிலைமை வந்தால் நான் செத்துப் போய் விடுவேன் என்றார். இதை கேட்டு தங்கமயில் உடைந்து போனார்.
அதற்குப்பின் வீட்டில் பாண்டியன்- கோமதி இருவரும் தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வருவதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். கோமதி, அக்கம் பக்கத்தில் எல்லோருமே தங்கமயில் கர்ப்பமாக இருப்பதால் வீட்டிற்கு எப்போது அலைத்து வருவீர்கள் என்று கேட்கிறார்கள். என்ன சொல்வதென்றே புரியவில்லை என்றார். பாண்டியன், நானும் அதைப்பற்றி தான் யோசிக்கிறேன். தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வரலாம்ன்னு இருக்கிறேன் என்றார். சரவணன், அதெல்லாம் முடியாது. என்னால் இனி தங்கமயில் உடன் சேர்ந்து வாழ முடியாது. அவள் பண்ண துரோகத்தை நீங்கள் மறந்திருக்கலாம், நான் மறக்க மாட்டேன்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நான் ரொம்பவே வலி வேதனை கஷ்டங்கள் எல்லாம் அனுபவித்து விட்டேன். குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், அவளுடன் சேர்ந்து வாழ முடியாது. என்னை புரிந்து கொள்ளுங்கள் என்றார். சரவணன் நிலை கண்டு பாண்டியன்- கோமதி இருவரும் எதுவும் பேச முடியாமல் தவித்தார்கள். தங்கமயில்- சரவணன் வாழ்க்கையை நினைத்து பாண்டியன் குடும்பமே கவலையில் இருக்கிறது. இன்னொரு பக்கம் சரவணன் பற்றி சக்திவேல் குடும்பத்தில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சக்திவேல், குமாரின் கல்யாணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார். சுகன்யா, அரசியை குமாருக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்றார். இதை கேட்டு முத்துவேல் எல்லோருமே ஷாக் ஆனார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வடிவு, ஏற்கனவே குமாருக்கு நல்ல பெயர் இருக்கிறது. இதில் நான் போய் கேட்டவுடன் பொண்ணை தூக்கி கொடுத்துட்டு தான் மறு வேலை செய்வார்கள் என்று கிண்டல் அடிக்கிறார். உடனே சக்திவேல், என் மகனுக்கு நல்ல வசதியான இடத்தில் நான் கல்யாணம் செய்து வைப்பேன். யாரும் என் மகனுக்காக கல்யாணம் செய்து வைக்க கஷ்டப்படத் தேவையில்லை என்கிறார். முத்துவேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அதற்கு பின் சரவணன் சோகத்தில் இருப்பதால்
பழனி, கதிர், செந்தில் எல்லோருமே குடித்து விட்டு ஜாலியாக ஆட்டம் பாட்டம் என்று இருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இதை அறிந்த பாண்டியன் எதுவும் திட்டவில்லை. தன் மகனின் வாழ்க்கையை நினைத்து ரொம்பவே எமோஷனலாக வருத்தப்படுகிறார். பின் தூங்காமல் பாண்டியன் இருக்கிறார். இதை கவனித்த பழனி, பாண்டியனிடம் விசாரிக்கிறார். அப்போது பாண்டியன், என் மகன் ரொம்பவே மனமுடைந்து போயிருக்கிறார். சித்திரவதை படுகிறான். நான் நல்ல அப்பாவே இல்லை என்று எமோஷனாக பேசுகிறார். பழனியும் பாண்டியனுக்கு ஆறுதல் சொல்கிறார். இதை எல்லாம் சரவணன் கேட்டு வருத்தப்படுகிறார். அதற்குப்பின் சரவணன், அஞ்சலிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மளிகை சாமானை பொருள்களை கொடுத்துவிட்டு வருவதாக சொல்கிறார்.