கதிர் மறைத்த ரகசியத்தை அறிந்த பாண்டியன், கோபத்தில் ராஜி அப்பா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 23/2/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' அரசி, கல்லூரிக்கு போகும்போது யாருக்கும் தெரியாமல் சக்திக்கு பாய் சொல்லிவிட்டு சொன்னார். இதையெல்லாம் சுகன்யா பார்த்துவிட்டு சக்தியின் அப்பாவிடம் பேசி இருந்தார். அவர்கள் ஏதோ சொல்லி சமாளித்தார்கள். அப்போது சுகன்யா, பாண்டியனை பழிவாங்க நானும் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னவுடன் அவர்கள் இருவருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பா கண்விழித்து விட்டார்.

சரவணன், தங்கமயிலை வேலைக்கு அழைத்து சென்றார். என்ன செய்வது என்று புரியாமல் தங்கமயில் தவித்தார். பின் தங்கமயில், இது தான் வேலை செய்யும் இடம் என்று ஒரு பில்டிங்கை காண்பித்து தங்கமயில் இறங்கி கொண்டார். அங்கு இருக்கும் வாட்ச் மேனிடம் இந்த வேலை இருக்குமா? என்று தங்கமயில் கேட்க, உடனே அவர் அதெல்லாம் கிடையாது கிளம்பு என்று விரட்டி விட்டார். பின் எங்கு செல்வது என்று புரியாமல் ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து தங்கமயில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அங்கு இருப்பவர்கள் தங்கமயிலை ஒரு மாதிரியாக பார்க்க, அவர் ரொம்ப பயந்தார். இன்னொரு பக்கம் அரசி, சக்தியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சக்தி, தன்னுடைய காதலைப் பற்றி கேட்க, அரசி ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் சக்தியின் காதலை ஏற்றுக்கொண்டு அரசி சிரித்து விட்டு சென்றார். அரசி தன் வலையில் விழுந்ததை நினைத்து சக்தி சந்தோஷப்பட்டார். கடைசியில் சரவணன், தங்கமயிலுக்கு போன் செய்து நான் வேலை செய்யும் இடத்திற்கு வருகிறேன் என்று சொன்னவுடன் தங்கமயில் ரொம்பவே பதறி போனார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் சரவணன் வருவதற்குள் தங்கமயில் தான் வேலை செய்வதாக சொல்லும் இடத்திற்கு வந்து விட்டார். ஒரு வழியாக சரவணன் இடம் இருந்து தங்கமயில் தப்பித்து விட்டார். இன்னொரு பக்கம் மளிகை கடையில் தூங்காததால் பழனி தூங்கி தூங்கி விழுந்தார். இதனால் பாண்டியன் அவரை திட்டி வீட்டுக்கு போக சொன்னார். அந்த சமயம் பார்த்து போன் செய்த சுகன்யா, என்னை ஏன் தனியாக விட்டுப் போனீர்கள். உங்களை திருமணம் செய்திருக்க கூடாது என்று வழக்கம் போல பழனியை திட்ட ஆரம்பித்து விட்டார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பாவை பார்க்க பாண்டியன் வந்தார். பின் கதிர் ஹாஸ்பிடலுக்கு வந்ததால் மீனா, அவர் அம்மா இருவருமே வீட்டிற்கு சென்று விட்டார்கள். செந்திலும் தன் மாமனாரின் நிலை நினைத்து கதிரிடம் வருத்தப்பட்டு பேசி இருந்தார். அதற்குப்பின் வீட்டில் பாண்டியன், அரசி இடம் நீ கோயிலுக்கு போனியா? யாரிடம் பேசிக் கொண்டிருந்தாய்? என்று கேட்டதற்கு, அவர் ரொம்ப பயந்து விட்டார். பின் அரசி, ஏதோ சொல்லி சமாளிக்க, கோமதி கோபப்பட்டு அரசியை திட்டி இருந்தார். ஆனால், கடைசிவரை அரசி உண்மையை சொல்லவே இல்லை.

https://youtu.be/guGlnfUXA4c?si=0P7EfVhn6_JWCck4

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாண்டியன் வீட்டிற்கு போலீஸ் வருகிறது. அப்போது அவர்கள், நகை காணாமல் போனது என்று ராஜி- கதிர் கொடுத்த வழக்கை பற்றி சொல்கிறார்கள். அப்போது ராஜி, கண்ணன் என்பவர் தான் என்னுடைய நகையை திருடி சென்றான் என்று சொன்னவுடன் பாண்டியன் ஷாக் ஆனார். பின் கதிரை வெளியே அழைத்துச் சென்ற பாண்டியன், ராஜியின் அப்பாவிடம் என் மகன் நகை திருடவில்லை. என் மகன் மீது இனிமேல் வீண்பழி போட வேண்டாம். என் மகனை குறை சொன்னால் இனி நடப்பதே வேறு கோபத்தில் கத்தினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full