குமார் செய்த வேலையால் மோதிக்கொள்ளும் பாண்டியன்-சக்திவேல் குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், குமாரை கன்னத்திலேயே அறைந்து வார்னிங் கொடுத்தார். கடைசியில் சுகன்யாவின் அப்பா- அம்மா இருவரும் தீபாவளி சீர் கொடுப்பதற்காக பாண்டியன் வீட்டிற்கு வந்து இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து ராஜி சோகமாக இருந்தார். பின் கோமதி, உனக்கும் எனக்கும் தான் தீபாவளி சீர் கொடுக்க குடுப்பனை இல்லை என்றெல்லாம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். கோமதி, தீபாவளி பலகாரங்களை செய்து கொண்டிருந்தார்.
மீனா, ராஜி, அரசி எல்லோருமே கோமதிக்கு உதவி செய்தார்கள். அப்போது மீனாவுக்கு போன் செய்த செந்தில், நீ வீட்டுக்கு இன்னும் வரவில்லையா? தீபாவளி பண்டிகையை நாம் குவாட்டர்ஸில் கொண்டாடலாம். கிளம்பி வா என்றெல்லாம் சொன்னார். மீனா முடியாது என்று மறுத்து விடுகிறார். இதை கவனித்த கோமதி, ஒழுங்கு மரியாதையாக வீட்டுக்கு வா செந்தில், தீபாவளி கொண்டாடலாம் என்று திட்டி வைத்து விட்டார். அதற்குப்பின் பாண்டியன் வீட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாட பட்டாசு மலையை குவித்து வைத்திருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது பழனி, கோமதிக்கு தாய் வீட்டு சீரை கொடுத்தார். இதை பார்த்து கோமதி ரொம்பவே எமோஷனல் ஆனார். அப்போது பழனி, என்னால் நகை வாங்க முடியவில்லை என்றாலும் துணி தான் எடுக்க முடிந்தது என்றார். இதை கேட்டு கோமதி, இதுவே எனக்கு பெரிய விஷயம். எனக்கு பிடித்த கலரில் எடுத்துக் கொடுத்திருக்கிறாய் என்று ரொம்ப எமோஷனலாக தன்னுடைய தம்பி இடம் பேசிக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவேல் வீட்டில் தீபாவளி பண்டிகைக்காக பழனி- சுகன்யாவிற்கு துணி எல்லாம் எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அப்போது முத்துவேல், உனக்கு கடை மளிகை கடை பார்த்து
விட்டோம். தீபாவளி பண்டிகை முடிந்த உடனே கதையை நீ கடையை தொடங்கலாம் என்று சொல்கிறார். ஆனால், பழனிக்கு விருப்பமில்லை. இருந்தாலுமே சுகன்யா - காந்திமதி எல்லோரும் சொல்வதால் பழனி அமைதியாக இருக்கிறார். பின் பாண்டியன், துணி எடுக்க உனக்கு எப்படி பணம் கிடைத்தது? என்று கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பழனி, சுகன்யா வீட்டில் கொடுத்த பணத்தை வைத்து தான் எடுத்தேன் என்கிறார். பாண்டியன், என்னிடம் கேட்டால் நான் தரமாட்டேன் என்று கேட்கிறார். அதற்கு செந்தில் நக்கல் அடிக்கிறார். அதற்குப் பின் பாண்டியன்- முத்துவேல் இரண்டு வீட்டிலுமே தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அப்போது குமார், சரவணன் தன்னை அடித்ததால் அவர் மீது பட்டாசை போடுகிறார். இதனால் கோபப்பட்டு பாண்டியன் மகன்கள் குமாரிடம் சண்டைக்கு போகிறார்கள். பின் சக்திவேல்- முத்துவேல் இருவருமே சண்டைக்குப் போகிறார்கள். பின் இரு குடும்பத்திற்கும் இடையே கலவரம் வெடிக்கிறது. ஒரு வழியாக காந்திமதி பஞ்சாயத்து பண்ணி அனுப்பி வைக்கிறார்.