செந்திலை அவமானப்படுத்திய பாண்டியன், தங்கமயிலின் சுயரூபம் வெளிவருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 12/3/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், அரசாங்க வேலையெல்லாம் வேண்டாம். இருக்கிற வேலையை செய் என்று திட்டி விட்டு சென்றார். அதற்கு பின் சுகன்யாவை பார்க்க பழனி அவர் அண்ணன் வீட்டிற்கு போனார். ஆனால், அங்கு சுகன்யா வழக்கம்போல் பழனியை வறுத்தெடுத்து நான் இங்குதான் இருப்பேன் என்று சொல்லிவிட்டார். அதனால் பழனியால் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இதை எல்லாம் கேட்ட ராஜியின் அம்மா, பழனி தம்பி ரொம்ப நல்லவர்.

அவரிடம் பொறுமையாக பேசு, கோபப்படாதே என்று அறிவுரை சொன்னார். ஆனால், அதை எல்லாம் சுகன்யா கண்டு கொள்ளவே இல்லை. அதற்குப் பின் கதிர் தன்னுடைய நண்பருக்கு திருமணம் நடந்தது என்று பொய் சொல்லி ராஜியை வெளியே அழைத்து சென்றார். ஆனால், பாண்டியன் இந்த முறை எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் அரசி வீட்டிற்கு தெரியாமல் படம் பார்ப்பதற்காக குமாருடன் சென்றார். அப்போது குமார், அரசிக்கு பரிசு கொடுத்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் மீனா, தன்னுடைய அப்பா வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது மீனா அப்பா, கவர்மெண்ட் வேலை விஷயமாக என்ன முடிவு எடுத்தீர்கள்? இந்த வேலை கிடைப்பதற்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உங்களால் பணம் கூட ரெடி பண்ண முடியவில்லையா? என்று பாண்டியன் குடும்பத்தையும் செந்திலையும் பற்றி ஏளனமாக பேசி இருந்தார். உடனே மீனா, என் வீட்டில் நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறார்கள் என்று அவர்களுக்கு ஆதரவாக பேசினார். இன்னொரு பக்கம் செந்தில், தங்கமயில் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்.

நேற்று எபிசோட்:

அவரைப் பார்த்தவுடன் தங்கமயில், பயந்து உள்ளே சென்று விட்டார். செந்தில், மளிகை பொருட்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தார். அப்போது தங்கமயில், வெளியே வந்தார். செந்திலை பார்த்தவுடன் தங்கமயில் ஷாக் ஆகி, ஹோட்டலில் சாப்பிட வந்தேன் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். செந்தில் அதை நம்பி விட்டு சென்றார். பின் ஹோட்டல் ஓனர், வேலை செய்யும் போது ஒழுங்காக செய்யுங்கள் என்று திட்டி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ராஜி- கதிர் இருவரும் நண்பரின் திருமணத்திற்கு தயாராகி சென்றார்கள். மண்டபத்தில் கதிரை பற்றி எல்லா பெண்களுமே ரொம்ப புகழ்ந்து பேசுவதால் ராஜிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நண்பர் திருமணத்தில் சந்தோஷமாக ராஜி- கதிர் இருவரும் ஆட்டம் பாட்டம் என்று இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் செந்தில், தலைவலி தாங்க முடியாததால் வீட்டிற்கு வந்துவிடுகிறார். அந்த சமயம் வந்த பாண்டியன், கடையில் வேலை முடிந்ததா? எதற்காக சீக்கிரம் வந்தாய்? வசூல் கணக்கு எங்கே? அந்த பணத்தை பாதி எடுத்து விட்டாயா? என்றெல்லாம் மோசமாக பேசுகிறார். இதனால் கோபப்பட்ட செந்தில், ரூமிற்கு சென்று விடுகிறார். பின் மீனா- கோமதி இருவரும் செந்திலை சமாதானம் செய்யப் பார்க்கிறார்கள். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் தங்கமயில் நேரம் ஆகிவிட்டது என்று தன்னுடைய ஓனரிடம் வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்கிறார். ஆனால், அவர் முடியாது. வேலை செய்துதான் ஆக வேண்டும் என்று கோபமாக சொல்கிறார். அப்போது தங்கமயிலுக்கு போன் செய்த கோமதி, வீட்டிற்கு வரவில்லையா? என்று கேட்கிறார். அதற்கு தங்கமயில் தாமதமாகும் என்று சொல்கிறார். அதன் பின் சரவணன், நான் உன்னுடைய ஆஃபீஸ்க்கு வெளியே தான் நின்று கொண்டிருக்கிறேன் வருகிறாயா? என்று கேட்டவுடன் தங்கமயில் ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full