செய்த தவறை ஒத்து கொண்ட தங்கமயில் குடும்பம், கொந்தளித்த பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 12/12/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, தங்கமயில் செய்த துரோகத்திற்காக கொந்தளித்தார். சரவணன் எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தார். பின் பாண்டியன், தங்கமயிலின் அப்பா, அம்மாவிற்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வர சொன்னார். என்ன நடக்குமோ என்ற பயத்தில் தங்கமயில் அழுது கொண்டு இருந்தார். அந்த சமயம் பார்த்து சரவணன் அக்கா வீட்டிற்கு வந்தார். அவர் தங்கமயிலையும் அவருடைய குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருந்தார்.

பாண்டியன் மகள் குழலி, தங்கமயில் அவருடைய குடும்பத்தையும் ரொம்ப மோசமாக வெளுத்து வாங்கினார். கோமதியும் திட்டிக் கொண்டிருந்தார். பாண்டியன் எவ்வளவு சொல்லியுமே இருவரும் கேட்கவில்லை. தங்க மயிலால் எதுவுமே பேச முடியவில்லை. ரொம்பவே உடைந்து போய் இருந்தார். அந்த சமயம் பார்த்து தங்கமயிலின் அப்பா, அம்மா இருவரும் வந்து விட்டார்கள். உடனே கோமதி, குழலி இருவருமே சேர்ந்து தங்கமயிலின் அப்பா அம்மாவை மோசமாக பேசி இருந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அவர்களுக்கு உண்மை புரியாமல், என்ன நடந்தது என்று தங்கமயில் இடம் விசாரித்தார்கள். அப்போது
கோமதி, உங்கள் மகள் 12 ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறாள். அவள் என் மகனை விட இரண்டு வயது பெரியவள் எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. இவ்வளவு கேவலமான ஜென்மங்களா நீங்கள்? என்று சொன்னார். இதைக்கேட்டு தங்கமயிலின் அப்பா-அம்மா இருவருமே ஷாக்காகி இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயிலின் அம்மா, அப்பாவும் உண்மையை சொல்லாமல் மாற்றி மாற்றி பொய்யே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கொந்தளித்த சரவணன், தங்கமயிலின் அப்பாவை அடிக்க போகிறார். பின் கோமதி, குழலி இருவருமே தங்கமயிலின் குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசுகிறார்கள். ஒரு கட்டத்தில் தங்கமயிலின் அப்பா, அம்மா இருவருமே தங்களுடைய தவறை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது கொந்தளித்த பாண்டியன், நீங்கள் மறைத்ததெல்லாம் எனக்கு பெரிய விஷயமே கிடையாது. ஆனால், என்னிடம் பொய் சொன்னது ரொம்பவே தப்பு. என்னை யார் ஏமாற்றினாலும் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். என் பிள்ளைகளையும் நான் அப்படித்தான் வளர்த்தேன். இவ்வளவு பெரிய துரோகத்தை நீங்கள் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று ரொம்ப எமோஷனலாக
பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full