பழனியை எல்லோர் முன்பும் அசிங்கப்படுத்தும் பாண்டியன், மீனா செய்த வேலை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி -அரசி இருவருமே ரோட்டில் வந்து கொண்டிருக்கும் போது குமார் மன்னிப்பு கேட்டார். ஆனால், அரசி கோபப்பட்டு திட்டி அனுப்பி விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு மீனா வந்திருந்தார். ராஜி, கோமதி எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பின் கோமதி, வீட்டில் தங்க சொன்னார். அந்த சமயம் பார்த்து செந்தில் போன் செய்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்து சமைத்து விடு என்றார். இதனால் மீனா, நான் இங்கேயே தங்கி விட்டு வரச் சொல்லி செந்தில் சம்மதம் சொல்லிவிட்டார் என்று பொய் சொன்னார். அரசி- ராஜி இருவரும் சந்தோஷப்பட்டார்கள்.
வேலை முடித்துவிட்டு நேராக செந்தில் வீட்டிற்கு போனார். ஆனால், அங்கு மீனா இல்லை. செந்தில் போன் செய்தார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. பின் கோமதிக்கு போன் செய்து மீனாவை பற்றி செந்தில் விசாரித்தார். இதனால் செந்திலுமே பாண்டியன் வீட்டிற்கு வந்தார். பின் செந்தில், நான் மீனாவை இங்க தங்க சொல்லவே இல்லை. எதற்காக நான் இங்கு தங்க சொன்னதாக பொய் சொல்லி வைத்திருக்கிறாய்? வீட்டிற்கு வர விருப்பம் இல்லையா? என்று கேட்டார். அதற்கு மீனா, எனக்கு நீங்கள் வேலை மேல் வேலை வைத்தீர்கள். எனக்கு அதை செய்ய முடியவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதனால் தான் நான் இங்கே வந்துவிட்டேன் என்றார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. இதை பார்த்த கோமதி, செந்திலை திட்டினார். பின் மீனா வழக்கம் போல் ராஜியிடம் பேச சென்று விட்டார். அதற்குப்பின் செந்தில் தன்னுடைய அண்ணன்களுடன் சேர்ந்து ஜாலியாக இருந்தார். மறுநாள் காலையில் பயிற்சிக்காக கதிர், ராஜியை அழைத்துக் கொண்டு கிரவுண்டுக்கு வந்திருந்தார். அப்போது ராஜி செய்யும் அட்ராசிட்டியால் கதிருக்கு கோபம் வந்தது. பின் ராஜியை திட்டிவிட்டு கதிர் அங்கிருந்து சென்று விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, பால் காய்கறி எல்லாம் வாங்கி வரச்சொல்லி செந்தில் எழுப்புகிறார். ஆனால், செந்தில் எழாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் மீனா வேலைக்கு தயாராகிறார். பின் செந்தில் சமைக்கவில்லையா? என்று கேட்டார். நீங்கள் எதுவுமே வாங்கி வரவில்லை என்று நக்கலாக பதில் அளித்து விட்டார். அங்கே இருந்து மீனா கிளம்பி பாண்டியன் வீட்டுக்கு வருகிறார். அதற்குப்பின் டெலிவரி அதிகமாக இருப்பதால் சரவணன், பழனியை கடையிலேயே இருக்க சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
மாணிக்கம் ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப நக்கலாக பழனியை பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த பாண்டியன், சரவணன் மட்டும் தனியாக எப்படி கிளம்பி சென்று இருக்கான். நீ என்ன செய்தாய்? என்று எல்லோரும் முன்னாடியும் பழனியை திட்டி விடுகிறார். இதனால் பழனி, கஷ்டப்பட்டு கொண்டு அங்கிருந்து செல்கிறார். பின் பாண்டியன் வெளியே சென்றவுடன் மாணிக்கம் கல்லாவில் உட்கார்ந்து கொண்டு பணத்தை எடுப்பதற்காக திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது