அரசியிடம் மோசமாக நடந்து கொள்ளும் குமார், வெளுத்து வாங்கும் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

அரசியிடம் மோசமாக நடந்து கொள்ளும் குமார், பாண்டியன் மாஸ் ஆக்சன்

By subhashini · 30/6/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், இனிமேல் நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த செந்திலிடம் மீனா, உங்களை யார் இப்படி எல்லாம் செய்ய சொன்னது என்று விசாரித்தார். செந்தில், தன்னுடைய மாமனார் சொல்லி தான் இப்படி எல்லாம் செய்தேன் என்ற உண்மையை சொல்லிவிட்டார். இதனால் கொந்தளித்த மீனா, தன்னுடைய அப்பா என்று கூட பார்க்காமல் ரவியை வெளுத்து வாங்குகிறார். ரவியால் எதுவுமே பேச முடியாமல் திணறுகிறார். இருந்தாலும் மீனா, தன்னுடைய அப்பாவை திட்டி தன்னுடைய கணவரை விட்டு ஒதுங்கி இருக்க சொன்னார்.

காந்திமதி, பாண்டியனிடம் அரசியிடம் பெண் கேட்கும் விஷயத்தைப் பற்றி வீட்டில் பேசி இருந்தார். வழக்கம் போல சக்திவேல் கொந்தளித்தார். ஆனால், முத்துவேல் எந்த மறுப்பும் சொல்லவில்லை. குமார் தன் அப்பாவை திட்டி அமைதியாக இருக்க சொன்னார் . பின் காந்திமதி, பழனி இருவரும் பாண்டியனின் வீட்டிற்கு பெண் கொண்டு சென்றார்கள். காந்திமதி, குமார், அரசியை விரும்புகிறான். இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதை கேட்டவுடன் கோமதி, வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். தன்னுடைய அம்மா என்று கூட பார்க்காமல் சண்டை போட்டார். அந்த சமயம் பார்த்து அரசி வந்தார். பின் பாண்டியன், காந்திமதி சொன்ன விஷயத்தை சொன்னார். அரசி, எனக்கு குமாரை சுத்தமாக பிடிக்காது. நான் அவனை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று காந்திமதி முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டார். அதனால் வருத்தப்பட்டு காந்திமதி அங்கிருந்து சென்று விட்டார். பாண்டியன் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், அரசி இருவரும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததை பற்றி பழனி சொல்கிறார். அதைக் கேட்டு குமார் கொதிக்கிறார். சக்திவேல், இதுக்குதான் நான் அந்த குடும்பத்தில் யாரிடமும் பேச வேண்டாம் என்று சொன்னேன் என்கிறார். வடிவு, வழக்கம்போல குமார் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி பேசுகிறார். இதனால் மாரி ரொம்பவே வருத்தப்படுகிறார். குமார், என் வாழ்க்கையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அங்கிருந்து கிளம்புகிறார். பின் அரசி கல்லூரிக்கு செல்லும் வழியில் மறைத்து குமார் சண்டை வாங்குகிறார்.

சீரியல் ட்ராக்:

என்னை விட உனக்கு வேறு எவனாவது கிடைத்து விடுவானா? என்றெல்லாம் வம்பு இழுக்கிறார். அரசி, குமாரை திட்டுகிறார். இதை பார்த்த கார்த்திகேயன், அரசிக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இதனால் கோபத்தில் குமார், அரசியை அடிக்க வருகிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன், குமாரின் நெஞ்சிலே எட்டி மிதித்து கீழே தள்ளுகிறார். பின் குமாரை அடி வெளுத்து வாங்குகிறார் பாண்டியன். குமாரால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் கோமதி, காந்திமதி குமாருக்கு பெண் கேட்டு வந்த விஷயத்தை மீனாவிடம் சொல்லி புலம்புகிறார். மீனாவும் அதிர்ச்சியாகிறார். பின் மீனா, செந்தில் செய்த வேலையை கோமதியிடம் சொல்லாமல் மறைக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full