கதிர் மறைத்த ரகசியத்தை அறிந்து பாண்டியன் செய்தது, ராஜியின் அப்பா நிலைமை? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 26/2/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' ரூமுக்குள் பழனி வந்த உடனே சுகன்யா தாண்டவம் ஆடி இருந்தார். ஏன் வீட்டிற்கு வரவில்லை? கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆகுது? எதற்காக இப்படி பண்ணுகிறீர்கள் என்று பழனியை வறுத்தெடுத்தார். ஆனால், பழனியால் எதுவுமே பேச முடியவில்லை அமைதியாக இருந்தார். அதற்கு பின் தூங்கும்போது பழனி குறட்டை விட்டார். இதனால் கோபப்பட்ட சுகன்யா பழனியை திட்டி எழுப்பி விட்டார். இதையெல்லாம் வெளியே வந்த சரவணன் கேட்டு வருத்தப்படட்டார். பழனி இரவு முழுவதும் தூங்காமல் இருந்தார்.

மறுநாள் கடையில் பழனி தூங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் பாண்டியன் திட்டி இருந்தார். அதற்குப்பின் செந்தில், பழனியை அழைத்துக்கொண்டு வெளியே போனார். அப்போது வந்த சரவணன், உங்களுக்கும் அத்தைக்கும் என்ன பிரச்சனை? என்ன நடக்கிறது? என்று வெளிப்படையாக கேட்டவுடன் பழனி ஷாக் ஆனார். நேற்று எபிசோட்டில் பழனி, எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. பேசி கொண்டு இருந்தோம் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பா, நீ அந்த வீட்டில் சந்தோசமாக இருக்கிறாயா? உன்னை பார்த்தால் தெரியவில்லை என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதற்கு மீனா, நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்றார். பின் மீனாவின் அம்மா, செந்திலையும் செந்தில் குடும்பத்தை பற்றியும் ரொம்ப பெருமையாக பேசி இருந்தார். ஆனால், அவர் பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் தங்கமயில் எங்கு செல்வது என்று தெரியாமல் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று சொல்லி புலம்பி அழுதார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள். ராஜியின் நகை காணாமல் போன விஷயத்தைப் பற்றி கதிரை விசாரிக்கனும் கூப்பிடுங்கள் என்றார்.

நேற்று எபிசோட்:

வீட்டில் உள்ள எல்லோருமே பயந்து விட்டார்கள். பின் ராஜி, கதிருக்கு போன் செய்து வீட்டிற்கு வர வைத்தார். பின் மீனா, ராஜி இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் நகை காணாமல் போன விஷயத்தை புகார் கொடுத்ததை சொல்லி விட்டார்கள். கோமதி ஷாக் ஆனார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் எபிசோட்டில் போலீஸ் கதிரிடம் விசாரணை நடத்துகிறது. அப்போது ராஜி, நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு கதிர் உடைய நண்பர் கண்ணன் தான் நகையை என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:

இதை கேட்டவுடன் பாண்டியன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள். வீட்டில் உள்ளவர்கள் மாத்தி மாத்தி அதை பற்றி ராஜியிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு போலிஸ், உங்க பிரச்சனை அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள். கதிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டும் என்று சொல்கிறார். உடனே மீனா எதுவாக இருந்தாலும் உள்ளே போய் பேசலாம். கதிர் போலீஸிடம் பேசிவிட்டு வரட்டும் என்று சொல்கிறார். அப்போது போலீஸ், நகையை வாங்க முடியாது. முடிந்தவரை பணம் வாங்கி தருகிறோம் என்று சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் பாண்டியன், ராஜியிடம் நடந்ததை விசாரிக்க, மீனா ஏதேதோ ஒரு காரணத்தை சொல்லி சமாளிக்கிறார். ஆனால் ,கதிர் நகை எடுக்கவில்லை என்றவுடன்பாண்டியன்,கதிரை திட்டியது நினைத்து வருத்தப்படுகிறார். அதற்குப்பின் கோபத்தில் பாண்டியன், ராஜியின் அப்பாவிடம் இதைப் பற்றி சொல்ல வெளியே கூப்பிடுகிறார். அப்போது பாண்டியன், கதிருக்காக சப்போர்ட் செய்து ஆவேசமாக ராஜியின் அப்பாவை திட்டிக் கொண்டிருக்கிறார். அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full