சொந்தமாக மளிகை கடை தொடங்க இருக்கும் பழனி, பாண்டியன் எடுத்த முடிவு - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் முத்துவேல், உனக்கு கடையை ஏற்பாடு செய்து விட்டோம். தீபாவளி பண்டிகை முடிந்த உடனே கடைக்கு நீ செல் என்றார். பழனி வேண்டாம் என்று சொல்லியுமே முத்துவேல் கேட்கவில்லை. பின் பழனியை தனியாக அழைத்து சென்ற காந்திமதி, சுகன்யாவிற்கு என்று தனி மரியாதை வேண்டும். நான் மாப்பிள்ளை கோமதியிடம் பேசுகிறேன் என்றார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சரவணன், வாக்கெடுப்புக்காக எல்லோருடைய ஆதார் கார்டையும் கேட்டார். ஆனால், தங்கமயில் மட்டும் ஏதேதோ சொல்லி சமாளித்தார் .சரவணன் இன்னும் கோபம் அதிகமானது.
சரவணன், ஆதார் கார்டை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே செந்தில் வீட்டிற்கு கிளம்பலாம் என்றார். மீனா முடியாது என்றார். பாண்டியன் கோபப்பட்டு செந்திலை திட்டிக் கொண்டிருந்தார். உடனே செந்தில், நான் கிளம்புகிறேன் என்று சென்று விட்டார். அதற்குப்பின் ரூமில் தங்கமயில் ஆதார் கார்டை தேடி கொண்டு இருந்தார். ஆனால், கிடைக்கவே இல்லை. பின் சரவணன், தங்கமயிலிடம் விசாரிக்க, அவர் வழக்கம் போல ஏதேதோ சொல்லி சமாளித்தார். கோபத்தில் சரவணன் கத்துகிறார். இதையெல்லாம் வெளியே இருந்து கோமதி-பாண்டியன் இருவரும் கேட்டு விட்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் தங்கமயில், வழக்கம் போல சரவணன் மீதுதான் தவறு என்பது போல புது கதையை சொன்னார். இதை நம்பி கோமதி- பாண்டியன் இருவருமே சரவணனை தான் திட்டினார்கள். அதற்குப் பின் கோமதி-பாண்டியன் இருவரும் பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது வழிமறித்த காந்திமதி, பழனி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அவனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அவருடைய அண்ணன்கள் கடை வைத்து தர இருக்கிறார்கள் என்கிறார். இதைக் கேட்டு பாண்டியன் ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காந்திமதி, நீங்கள் ஏதாவது சொல்வீர்கள் என்று தான் பழனி நினைக்கிறார். பழனி தனியாக கடை வைக்க உங்களுக்கு சம்மதமா? என்கிறார். அதற்கு பாண்டியன், எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவன் நல்லபடியாக வந்தால் சந்தோஷம்தான் என்று சொல்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த கோமதி, புதிதாக மளிகை கடை ஆரம்பிப்பதை பற்றி கேட்கிறார். அதற்கு பழனி, அண்ணன்கள் தான் இதை ஏற்பாடு செய்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று சொல்கிறார். அதற்கு கோமதி, நீ வாழ்க்கையில் முன்னேறினால் எனக்கு சந்தோசம் தான். நீ முன்னேற வேண்டாம் என்று நினைப்போமா? என்றெல்லாம் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் கேட்டு சுகன்யாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் சமைக்கவில்லை என்று செந்தில் சண்டை போடுகிறார். அதற்கு மீனா, நான் ஆபீசிலும் வேலை செய்துவிட்டு வீட்டிலும் என்னால் தனியாக வேலை செய்ய முடியாது. நீங்கள் உதவி செய்தால் நான் செய்யப்போகிறேன் என்று சொல்கிறார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி அங்கிருந்து கிளம்பி வருகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், நீ தனியாக கடை ஆரம்பித்தால் எனக்கு சந்தோஷம்தான். நல்லபடியாக தொடங்கு. நாங்கள் எப்போதும் உனக்கு சப்போர்ட்டாக இருப்போம் என்று மனதுக்குள் வருத்தம் இருந்தாலும் வெளியில் காண்பிக்காமல் பழனிக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். இதை கேட்டு பழனிக்கு சந்தோசமாக இருக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.