பாண்டியன் செயலால் வருத்தப்படும் கோமதி, சந்தோஷத்தில் ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கிளாஸ் முடிந்துவிட்டு ராஜி- கதிர் இருவரும் கிளம்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது இருவருமே ரொம்ப அன்பாகவும் பாசமாகவும் வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டு வந்தார்கள்.
புதிதான காதல் ஜோடிகள் போல் நடந்து கொண்டார்கள். இன்னொரு பக்கம் மீனா வேலைக்கு தயாராகி கிளம்பினார். அப்போது செந்தில், இன்றும் எனக்கு சமைக்கவில்லையா என்று வம்பு இழுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது.
கதிர், ராஜியின் வகுப்பு முடியும் வரை வெளியே காத்துக் கொண்டிருந்தார். பின் ராஜி வந்தவுடன் இருவரும் கிளம்பி சாப்பிட சென்றார்கள். அப்போது ராஜிக்கு பிடித்த சாப்பாடு எல்லாம் கதிர் வாங்கித் தந்து இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டார்கள். இன்னொரு பக்கம் பாண்டியனிடம் மன்னிப்பு கேட்பதற்காக கோமதி கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். பின் இதைப் பற்றி வீட்டுக்கு வந்த மீனாவிடம் அரசி சொன்னார். மீனா, நல்ல ஒரு காதல் கவிதை எழுதிக் கொடுங்கள். மாமாவின் மனது மாறிவிடும் என்றெல்லாம் சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோமதியும் சூப்பராக ஒரு லெட்டரை எழுதி முடித்து விட்டார். அதை தன் கணவரிடம் கொடுப்பதற்காக கிளம்பி இருந்தார். அப்போது வெளியில் தன் அண்ணன்களை பார்த்த கோமதி, உங்களுடன் நான் ஒன்றாக சேரனும் நினைத்தது என் தவறுதான். உங்களால் தான் என் கணவர் என்னிடம் பேசவில்லை. உங்கள் உறவே தேவையில்லை என்று சண்டை போட்டு விட்டு சென்றார். முத்துவேல் பெரிதாக எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் கோமதி, பாண்டியனை சந்திக்க கடைக்கு சென்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, தான் எழுதிய லெட்டரை பாண்டியனிடம் கொடுக்கிறார். பாண்டியர், ஒரு கஸ்டமர் பொருள் கேட்பதால் கோமதி கொடுத்த லெட்டரில் அந்த பொருளை மடித்துக் கொடுத்து அனுப்பி விடுகிறார். பின் இதை பற்றி கோமதி, மீனாவிடம் சொல்கிறார். பின் கோமதி-மீனா, அந்த லெட்டர் முக்கியம் என்று அந்த பொருள் வாங்கிய பெண்ணின் பின்னாடியே சென்று சண்டை போட்டு கடிதத்தை வாங்கி விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
மீண்டும் கோமதி அந்த கடிதத்தை கொடுக்கிறார். ஆனால், கோபத்தில் பாண்டியன் அதை கசக்கி தூக்கி போட்டு விடுகிறார். இதனால் மனமடைந்த கோமதி வேதனையில் வீட்டிற்கு செல்கிறார். கோமதி சென்ற பின் பாண்டியன் அந்த கடிதத்தை எடுத்து படித்து பத்திரமாக வைத்து கொள்கிறார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் பீச்சில் ஜாலியாக சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது