மனம் உடைந்து வீட்டை விட்டு வெளியேறும் பாண்டியன், வேதனையில் தவிக்கும் குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் வீடு சோகத்தின் கடலில் மூழ்கி இருந்தது. கோமதி வேதனை தாங்க முடியாமல் அரிசியை திட்டிக் கொண்டிருந்தார். சுகன்யா, எதுவும் சம்மந்தம் இல்லாமல் அமைதியாக இருந்தார். கோபத்தில் பழனி, குமார் வீட்டிற்கு சென்று சண்டை போட்டார். பின் ராஜி அப்பா வீட்டில், குமார்- அரசி காதலிக்கும் விஷயத்தைச் சொன்னவுடன் மொத்த பேருமே ஷாக் ஆனார்கள். உடனே சக்தி, மொத்த சொத்தையும் ஆட்டைய போடுவதற்கு இந்த வேலையை உன் தங்கை செய்தாளா? என்று மோசமாக பேசி இருந்தார்.
இதனால் ஆவேசத்தில் செந்தில்- கதிர், குமாரையும் அவருடைய அப்பாவையும் அடிக்கப் போனார்கள். பயங்கர கலவரம் ஆனது. பின் வீட்டில் உள்ளவர்கள் சண்டையை தடுத்துவிட்டார்கள். அதன் பின் பழனி, குமாருக்கு சொல்லி வையுங்கள். இனிமேல் அரசி பக்கம் வரவே கூடாது என்று எச்சரிக்கை கொடுத்துவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் அரசி, தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு அழுது புலம்பி இருந்தார். ஆனால், பாண்டியன் எதுவுமே பேசாமல் நிலை குலைந்து இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் ராஜி அப்பா, நீ உண்மையாகத்தான் அரசியை காதலித்தாயா? எதற்காக இதை செய்தாய்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். ஆனால், குமாரை உண்மையை சொல்லிவிடக்கூடாது என்று அவருடைய அப்பா சமாளித்தார். பின் பிரச்சனையை திசை திருப்ப சக்தி, பாண்டியன் வீட்டிற்கு வெளியே நின்று ரொம்ப மோசமாக பாண்டியனையும் அவருடைய மகள் அரசியையும் பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்க முடியாமல் பாண்டியன் மனம் உடைந்து அழுது கொண்டிருந்தார். மொத்த குடும்பமே வேதனையில் தவித்தது.
நேற்று எபிசோட்:
கோபம் தாங்க முடியாத செந்தில்- கதிர் இருவரும் சக்தியிடம் சண்டைக்கு போனார்கள். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி கைகலப்பு ஆனது. அதற்குப்பின் அப்பத்தா சண்டையை தடுத்து நிறுத்தி சக்தியும் குமாரையும் உள்ளே அழைத்து சென்றார். அதற்குப் பின் ராஜியின் அப்பா, இது நீங்கள் திட்டம் போட்டு செய்தது போல் தான் தெரிகிறது. இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இனிமேல் அரசியை காதலிக்கும் விஷயத்தில் தலையிடக்கூடாது. பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விடுங்கள் என்று திட்டி அறிவுரை சொல்லி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மாரி, இனிமேல் நீ அரசி பக்கம் போகவே கூடாது. உன் அப்பா தலையில் அடித்து சத்தியம் செய் என்கிறார். குமாரால் எதுவுமே சொல்ல முடியவில்லை. வேறு வழியில்லாமல் சத்தியம் செய்து விடுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் குடும்பமே வேதனை தாங்க முடியாமல் அழுது கொண்டு இருக்கிறது. பாண்டியனால் அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதனால் அவர் வீட்டை விட்டு வெளியே போகிறார். உடனே வீட்டில் உள்ள எல்லோருமே தடுத்தும் பாண்டியன் கேட்கவே இல்லை.
சீரியல் ட்ராக்:
பின் அவர், என் மீது மரியாதை இருந்தால் என்னை தொடர்ந்து யாரும் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்கிறார். எல்லோருமே பாண்டியன், எங்க போவார்? என்ன செய்வார்? என்ற குழப்பத்திலேயே இருக்கிறார்கள். பாண்டியன் மழையிலேயே நனைந்து கொண்டு தன் மகளை நினைத்து வருத்தத்துடன் அழுது கொண்டே போகிறார். இன்னொரு பக்கம் அப்பத்தா, கோமதியை நினைத்து வருத்தப்பட்டு புலம்புகிறார். இதையெல்லாம் பார்த்து குமாரின் அப்பாவிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில், செந்தில்- கதிர் இருவரும் அப்பாவை தேடி போகலாம் என்று கவலைப்பட்டு கிளம்புகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.