சரவணனின் வாழ்க்கையை நினைத்து வேதனைப்படும் சரவணன் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சரவணனின் வாழ்க்கையை நினைத்து வேதனைப்படும் சரவணன்

By subhashini · 19/6/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், எங்கள் வீட்டில் இவ்வளவு தவறு செய்துமே நீங்கள் அதை மறந்து என்னை பார்க்க வந்ததற்கு ரொம்ப நன்றி. என்னை மன்னித்து விடுங்கள் மாமா என்று எமோஷனலாக பேசினார். பின் கோமதி, தங்கமயிலின் உடல் நலத்தை பார்த்துக்க சொல்லிவிட்டு இருவரும் கிளம்புகிறார்கள். வீட்டிற்கு வந்த கோமதி, ஹாஸ்பிடல் நடந்ததை எல்லாம் ராஜி- அரசி இடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது வந்த சரவணன் இடம் பாண்டியன், தங்கமயில் உடம்பு முடியாமல் ஹாஸ்பிடல் இருக்கிறாள். அவரை சென்று பார்த்துவிட்டு வா என்றார். சரவணன் முடியாது என்கிறார். பின் பாண்டியன்- கோமதி கட்டாயப்படுத்தியதால் வேறு வழி இல்லாமல் சரவணன் ஹாஸ்பிடலுக்கு சென்றார்.

சரவணன் பார்த்து தங்கமயில் ஆச்சரியப்பட்டார். அப்போது சரவணன், உன் மீது நான் ரொம்பவே நம்பிக்கையும் பாசமும் வைத்து இருந்தேன், எல்லாத்தையும் நீ உடைத்து விட்டாய். உன்னால் என்னுடைய குடும்பம் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டது. குழந்தைக்கு எதுவும் ஆகாமல் நான் பார்த்துக்கொள்வேன். குழந்தைக்கு தேவையான எல்லா செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், குழந்தையை காரணம் காட்டி நீ என்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். உன்னுடன் சேர்ந்து வாழும் நிலைமை வந்தால் நான் செத்துப் போய் விடுவேன் என்றார். இதை கேட்டு தங்கமயில் உடைந்து போனார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதற்குப்பின் வீட்டில் பாண்டியன்- கோமதி இருவரும் தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வருவதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். கோமதி, அக்கம் பக்கத்தில் எல்லோருமே தங்கமயில் கர்ப்பமாக இருப்பதால் வீட்டிற்கு எப்போது அலைத்து வருவீர்கள் என்று கேட்கிறார்கள். என்ன சொல்வதென்றே புரியவில்லை என்கிறார். பாண்டியன், நானும் அதைப்பற்றி தான் யோசிக்கிறேன். தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வரலாம்ன்னு இருக்கிறேன் என்றார். சரவணன், அதெல்லாம் முடியாது. என்னால் இனி தங்கமயில் உடன் சேர்ந்து வாழ முடியாது. அவள் பண்ண துரோகத்தை நீங்கள் மறந்திருக்கலாம், நான் மறக்க மாட்டேன்.

சீரியல் ட்ராக்:

நான் ரொம்பவே வலி வேதனை கஷ்டங்கள் எல்லாம் அனுபவித்து விட்டேன். குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், அவளுடன் சேர்ந்து வாழ முடியாது. என்னை புரிந்து கொள்ளுங்கள் என்று எமோஷனலாக கதறி அழுகிறார். சரவணன் நிலை கண்டு பாண்டியன்- கோமதி இருவரும் எதுவும் பேச முடியாமல் தவிக்கிறார்கள். தங்கமயில்- சரவணன் வாழ்க்கையை நினைத்து பாண்டியன் குடும்பமே கவலையில் இருக்கிறது. இன்னொரு பக்கம் சரவணன் பற்றி சக்திவேல் குடும்பத்தில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சக்திவேல், குமாரின் கல்யாணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். சுகன்யா, அரசியை குமாருக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்கிறார். இதை கேட்டு முத்துவேல் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாண்டியன், தன் மகனின் வாழ்க்கை நினைத்து ரொம்ப எமோஷனலாக வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது வந்த பழனி, என்ன மாமா? என்று விசாரிக்கிறார். பாண்டியன், என் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்ற போது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நானாக பார்த்த கல்யாணமும் சரியில்லை. என் மகன் ரொம்பவே மனமுடைந்து போயிருக்கிறார். நான் நல்ல அப்பாவே இல்லை என்று வருத்தப்பட்டு பேசுகிறார். இது எல்லாம் கேட்டு சரவணன் அழுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full