பாண்டியன் வீட்டிற்கு வந்த போலீஸ், மீனா சொன்னதை கேட்டு ஷாக்கான கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சரவணன் வருவதற்குள் தங்கமயில் தான் வேலை செய்வதாக சொல்லும் இடத்திற்கு வந்து விட்டார். ஒரு வழியாக சரவணன் இடம் இருந்து தங்கமயில் தப்பித்து விட்டார். இன்னொரு பக்கம் மளிகை கடையில் தூங்காததால் பழனி தூங்கி தூங்கி விழுந்தார். இதனால் பாண்டியன் அவரை திட்டி வீட்டுக்கு போக சொன்னார். அந்த சமயம் பார்த்து போன் செய்த சுகன்யா, என்னை ஏன் தனியாக விட்டுப் போனீர்கள். உங்களை திருமணம் செய்திருக்க கூடாது என்று வழக்கம் போல பழனியை திட்ட ஆரம்பித்து விட்டார்.
இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பாவை பார்க்க பாண்டியன் வந்தார். பின் கதிர் ஹாஸ்பிடலுக்கு வந்ததால் மீனா, அவர் அம்மா இருவருமே வீட்டிற்கு சென்று விட்டார்கள். செந்திலும் தன் மாமனாரின் நிலை நினைத்து கதிரிடம் வருத்தப்பட்டு பேசி இருந்தார். அதற்குப்பின் வீட்டில் பாண்டியன், அரசி இடம் நீ கோயிலுக்கு போனியா? யாரிடம் பேசிக் கொண்டிருந்தாய்? என்று கேட்டதற்கு, அவர் ரொம்ப பயந்து விட்டார். பின் அரசி, ஏதோ சொல்லி சமாளிக்க, கோமதி கோபப்பட்டு அரசியை திட்டி இருந்தார். ஆனால், கடைசிவரை அரசி உண்மையை சொல்லவே இல்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோடில் ரூமுக்குள் பழனி வந்த உடனே சுகன்யா தாண்டவம் ஆடி இருந்தார். ஏன் வீட்டிற்கு வரவில்லை? கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆகுது? எதற்காக இப்படி பண்ணுகிறீர்கள் என்று பழனியை வறுத்தெடுத்தார். ஆனால், பழனியால் எதுவுமே பேச முடியவில்லை அமைதியாக இருந்தார். அதற்கு பின் தூங்கும்போது பழனி குறட்டை விட்டார். இதனால் கோபப்பட்ட சுகன்யா பழனியை திட்டி எழுப்பி விட்டார்.
இதையெல்லாம் வெளியே வந்த சரவணன் கேட்டு வருத்தப்படட்டார். பழனி இரவு முழுவதும் தூங்காமல் இருந்தார்.
நேற்று எபிசோட்:
மறுநாள் கடையில் பழனி தூங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் பாண்டியன் திட்டி இருந்தார். அதற்குப்பின் செந்தில், பழனியை அழைத்துக்கொண்டு வெளியே போனார். அப்போது வந்த சரவணன், உங்களுக்கும் அத்தைக்கும் என்ன பிரச்சனை? என்ன நடக்கிறது? என்று வெளிப்படையாக கேட்டவுடன் பழனி ஷாக் ஆனார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி, எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. பேசி கொண்டு இருந்தோம் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார்.
இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பா, நீ அந்த வீட்டில் சந்தோசமாக இருக்கிறாயா? உன்னை பார்த்தால் தெரியவில்லை என்கிறார். அதற்கு மீனா, நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்றார். பின் மீனாவின் அம்மா, செந்திலையும் செந்தில் குடும்பத்தை பற்றியும் ரொம்ப பெருமையாக பேசுகிறார். ஆனால், அவர் பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் தங்கமயில் எங்கு செல்வது என்று தெரியாமல் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று சொல்லி புலம்பி அழுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு போலீஸ் வருகிறார்கள். ராஜியின் நகை காணாமல் போன விஷயத்தைப் பற்றி கதிரை விசாரிக்கனும் கூப்பிடுங்கள் என்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே பயந்து விடுகிறார்கள். பின் ராஜி, கதிருக்கு போன் செய்து வீட்டிற்கு வர வைக்கிறார். பின் மீனா, ராஜி இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் நகை காணாமல் போன விஷயத்தை புகார் கொடுத்ததை சொல்லி விடுகிறார்கள். கோமதி ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.