ஜெயிலுக்கு போகும் பாண்டியன் குடும்பம், தீவிர விசாரணையில் போலீஸ் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 2/1/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் உண்மையை சொல்ல நினைத்தார். பாக்கியா, இது தான் நீ சொல்லும் கடைசி பொய். போலீஸ் வந்து கேட்டால் நான் சொன்னது தான் உண்மை என்று சொல். உன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றலாம். இல்லை என்றால் இதே வீட்டில் தான் இருக்கணும் என்று தங்கமயிலின் மனதை சலவை செய்து விட்டு சென்றார். தங்கமயில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். கடைசியில் உண்மையறிந்த பழனி, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்தார். கோமதி, தன் தம்பியை பார்த்ததுமே கதறி அழுதார்.

பழனி, பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் மீனா போலீஸ் ஸ்டேஷன் வந்தார். மீனாவை பார்த்தவுடன் கோமதி ரொம்ப எமோஷனல் ஆகி அழுதார். எல்லோருக்கும் மீனு ஆறுதல் சொல்லிவிட்டு தங்கமயில் வீட்டிற்கு சென்ற விஷயத்தை எல்லாம் சொன்னார். அதனால்தான் மீனாவின் பெயரை புகாரில் கொடுக்காமல் இருக்கும் விசயம் புரிந்தது. பின் மீனா, தனக்கு தெரிந்த வக்கீலை வைத்து பாண்டியன் குடும்பத்தை வெளியே எடுக்க பார்த்துக் கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் போலீஸ் வீட்டிற்கு வர இருப்பதால் பாக்கியா, தங்கமயிலை நடிக்க சொன்னார்.
தங்கமயிலும் போலீஸ் வந்தவுடன் தன் அம்மா சொன்னதை போலவே நடித்தார். பின் போலீஸ், வரதட்சணை கேட்டு உன்னை கொடுமை செய்தார்களா? உன் கணவர் அடித்துக் கொடுமைப்படுத்தினாரா? என்றெல்லாம் கேள்வி கேட்பதற்கு பாக்கியா சொன்னது போல தங்கமயில், ஆமாம் என்று சொல்லி புகாரில் கையெழுத்து போட்டு விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் போலீஸ், பாண்டியன் வீட்டை சுற்றியுள்ள எல்லோரிடமும் பாண்டியன் குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார்கள். எல்லோருமே பாண்டிய குடும்பத்தை பற்றி நல்லவிதமாக தான் சொல்கிறார்கள். காந்திமதி, மாரி, வடிவு எல்லோருமே தங்கமயில் பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள். பாண்டியன் குடும்பம் அப்படி கிடையாது என்றெல்லாம் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மீனா, மீனாவின் அப்பா, முத்துவேல், சக்திவேல் எல்லோருமே எடுத்து சொல்லி புரிய வைக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இதை எல்லாம் போலீஸ் கேட்கவில்லை. பின் போலீஸ், அரசி-ராஜி மட்டும் வீட்டிற்கு அழைத்துப் போகலாம். மற்றவர்கள் இங்கு இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுகிறார். இதை கேட்டு சரவணன் கோபப்படுகிறார். கோமதி ரொம்ப எமோஷனலாக கதறி அழுகிறார். பாண்டியன் குடும்பமே வேதனையில் உடைந்து கிடக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full