ராஜியை ரசித்து கொண்டு இருக்கும் கதிர், இருவரும் காதலை சொல்வார்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 31/1/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் முத்துவேல் குடும்பத்தில் எல்லோருமே பாண்டியன் வீட்டிற்கு சாப்பிட்டு சென்ற போது எடுத்த புகைப்படத்தை ஸ்டேட்டஸில் வைத்திருந்தார்கள். அதை பார்த்த தங்கமயில் தங்கை, பாக்கியத்திடம் காண்பிக்கிறார். தங்கமயில் அதை பார்த்து ஷாக் ஆகிறார். பாக்கியம், பாண்டியன் குடும்பத்தை மோசமாக திட்டுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் தன்னிடம் பேசவில்லை என்று கோமதி ரொம்ப வருத்தமாக இருக்கிறார். கோமதியின் கையால் எது கொடுத்தாலுமே பாண்டியன் வாங்கிக் கொள்ளவில்லை.

இன்னொரு பக்கம் மீனா வேலைக்கு கிளம்பினார். லேட்டாக எழுந்த செந்தில் சண்டை வாங்கினார். மீனா, செந்திலிடம் சண்டை போட்டு விட்டு சென்றார். மீனாவை சந்தித்து பேசுவதற்காக தங்கமயில் வந்தார். தங்கமயில், எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். என்னை இப்படி பண்ணி விட்டீர்களே? நியாயமா? என்றார். மீனா கோபப்பட்டு பேசிவிட்டு தங்கமயில் சொல்ல வருவதை கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் கடையில் போன கோமதி, மன்னிப்பு கேட்டு பேசி இருந்தார். ஆனால், பாண்டியன் கோபத்தில் கோமதியை திட்டி விட்டு வெளியே போக சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கதிர், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்றால் கோச்சிங் சென்டர் போக வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்கிறேன் என்றார். ராஜி, பணம் நிறையாகும். அது வேண்டாம் என்றார். கதிர், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் மீனா வேலையை முடித்து வரும் வரை தங்கமயில் காத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த மீனா, எதற்காக இப்படி செய்கிறீர்கள்? என்றார். தங்கமயில் ரொம்ப எமோஷனலாக அழுது பேசி மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் மீனா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் ராஜி- கதிர் இருவரும் சென்னை அகாடமியில் சேர்வதற்கான விவரங்களை எல்லாம் கேட்டார்கள். அதோடு இரண்டு நாள் ட்ரைனிங் போவதற்கு சென்னை போக இருப்பதால் வீட்டில் பேசலாம் என்று கதிர்-ராஜி இருவரும் முடிவு எடுத்தார்கள். அதற்குப்பின் பாண்டியனிடம் சென்னை இன்ஸ்டிடியூட்டில் சேர்வதை பற்றி ராஜி சொன்னார். பாண்டியன் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருவரையும் சென்னைக்கு போயிட்டு வர சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி-கதிர் இருவரும் சென்னைக்கு கிளம்புகிறார்கள். போகும் வழியில் ராஜிக்கு தேவையான எல்லா தேவைகளையும் கதிர் செய்து தருகிறார். பின் இருவரும் சென்னைக்கு சென்று விடுகிறார்கள். அங்கு ஒரு ஹோட்டலில் இருவரும் தங்குகிறார்கள். கதிர், ராஜியின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்டு ரசித்துக்கொண்டிருக்கிறார். அப்போது ராஜி கையில் அடிபட்டு விடுவதால் கதிர் ரொம்பவே துடித்து போகிறார். பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலாக பார்த்துக் கொள்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full