ராஜிக்காக கதிர் செய்த விஷயம், கோபத்தில் சரவணனை திட்டும் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, மீனாவிடம் போன் செய்து விசாரித்தார். அதற்குப்பின் தங்கமயில், மீனாவிற்கு ஃபோன் செய்தார். அதை பார்த்து செந்தில், உண்மை எது என்னவென்று புரியாமல் மீனாவை கண்டமேனிக்கு நடுரோட்டிலேயே திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் சந்தோஷமாக கோச்சிங் சென்டருக்கு போனார்கள். அப்போது கதிருக்கு போன் செய்த கோமதி, ராஜி நல்லபடியாக பார்த்துக்கொள். அவள் மீது கோபப்படாதே. உன் அப்பா போல் இருக்காதே என்றெல்லாம் அறிவுரை செய்தார்.
கதிர்-ராஜு இருவரும் மொத்த குடும்பத்திற்குமே துணி எடுத்தார்கள். பின் இருவருமே சென்னையில் இருந்து கிளம்ப தயாரானார்கள். இன்னொரு பக்கம் அஞ்சலி, சரவணனுக்கு மெசேஜ் செய்தார். சரவணன், பதில் ரிப்ளை செய்தார். பின் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஃபோனில் பேசிக் கொண்டார்கள். அதற்குப்பின் பாண்டியன் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கோமதி பரிமாற வருவதற்குள் பாண்டியன் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பழனி கோமதிக்காக சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், பழனியை திட்டு விட்டார். இன்னொரு பக்கம் தங்கமயிலை அவருடைய தங்கை வற்புறுத்தி சாப்பிட அழைத்து வந்தார்.
பாக்கியம், மாமியார் வீட்டில் வாழத்துப்பில்லை. இங்க மூணு பேருக்கு சமைக்கவே வழியில்லை. இதில் இன்னொரு ஆளுக்கு சேர்த்து சமைக்கணுமா? ஒழுங்கு மரியாதையாக உன் மாமியார் வீட்டிற்கு போகும்
வழியை பார் என்று மோசமாக பேசி விட்டார். இதனால் தங்கமயில் மனமுடைந்து சாப்பிடாமல் அங்கிருந்து சென்று விட்டார். பின் தன் கணவருக்கு வாய்ஸ் மெசேஜ் பேசி அனுப்பினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் கதிர்-ராஜி இருவரும் பீச்சில் சந்தோசமாக விளையாடிவிட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு ஒரு குரூப் பாட்டு பாடி டொனேஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர், ராஜிக்காக ஒரு பாடலை பாடியிருந்தார். அதைப் பார்த்து ராஜிக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. இன்னொரு பக்கம் சரவணன், அஞ்சலிக்கு போன் செய்து விசாரிக்கிறார். சரவணன் ஜாலியாக கடலை போட்டுக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து பாண்டியன் வருகிறார். பாண்டியன், எதற்காக கோயிலுக்கு போனாய் என்று கேட்கிறார். சரவணன், அம்மாவின் மீது இருக்கும் கோபம் குறைய வேண்டும் என்று போனேன் என்கிறார். பின் பாண்டியன், சரவணனை திட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் ரூமில் ராஜி, கதிருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரூமிற்கு வந்த கதிர், ராஜிக்காக மல்லிகைப்பூ வாங்கி வந்து தலையில் வைத்து விடுகிறார். இதெல்லாம் பார்த்து ராஜிக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.