போலீஸ் கோச்சிங் போன இடத்தில் கதிர்-ராஜி செய்யும் ரொமான்ஸ் அட்ராசிட்டி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், ராஜியின் வகுப்பு முடியும் வரை வெளியே காத்துக் கொண்டிருந்தார். பின் ராஜி வந்தவுடன் இருவரும் கிளம்பி சாப்பிட சென்றார்கள். அப்போது ராஜிக்கு பிடித்த சாப்பாடு எல்லாம் கதிர் வாங்கித் தந்து இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டார்கள். இன்னொரு பக்கம் பாண்டியனிடம் மன்னிப்பு கேட்பதற்காக கோமதி கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். பின் இதைப் பற்றி வீட்டுக்கு வந்த மீனாவிடம் அரசி சொன்னார். மீனா, நல்ல ஒரு காதல் கவிதை எழுதிக் கொடுங்கள். மாமாவின் மனது மாறிவிடும் என்றெல்லாம் சொன்னார்.
கோமதியும் சூப்பராக ஒரு லெட்டரை எழுதி முடித்து விட்டார். அதை தன் கணவரிடம் கொடுப்பதற்காக கிளம்பி இருந்தார். அப்போது வெளியில் தன் அண்ணன்களை பார்த்த கோமதி, உங்களுடன் நான் ஒன்றாக சேரனும் நினைத்தது என் தவறுதான். உங்களால் தான் என் கணவர் என்னிடம் பேசவில்லை. உங்கள் உறவே தேவையில்லை என்று சண்டை போட்டு விட்டு சென்றார். முத்துவேல் பெரிதாக எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் கோமதி, பாண்டியனை சந்திக்க கடைக்கு சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்றைய எபிசோட்டில் கோமதி, தான் எழுதிய லெட்டரை பாண்டியனிடம் கொடுக்கிறார். பாண்டியர், ஒரு கஸ்டமர் பொருள் கேட்பதால் கோமதி கொடுத்த லெட்டரில் அந்த பொருளை மடித்துக் கொடுத்து அனுப்பி விடுகிறார். பின் இதை பற்றி கோமதி, மீனாவிடம் சொல்கிறார். பின் கோமதி-மீனா, அந்த லெட்டர் முக்கியம் என்று அந்த பொருள் வாங்கிய பெண்ணின் பின்னாடியே சென்று சண்டை போட்டு கடிதத்தை வாங்கி விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
மீண்டும் கோமதி அந்த கடிதத்தை கொடுக்கிறார். ஆனால், கோபத்தில் பாண்டியன் அதை கசக்கி தூக்கி போட்டு விடுகிறார். இதனால் மனமடைந்த கோமதி வேதனையில் வீட்டிற்கு செல்கிறார். கோமதி சென்ற பின் பாண்டியன் அந்த கடிதத்தை எடுத்து படித்து பத்திரமாக வைத்து கொள்கிறார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் பீச்சில் ஜாலியாக சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=Ukp7kj9IgAA
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் ராஜி- கதிர் இருவரும் பீச்சில் விளையாடிவிட்டு ரூமுக்கு வருகிறார்கள். இருவருக்கிடையும் நெருக்கமும் காதலும் அதிகமாகிறது. பின் ஒருவரை ஒருவர் ரசிக்கிறார்கள். பின் இருவரும் ஒன்றிணைந்து விடுகிறார்கள்.