அனைவரும் எதிர்பார்த்த ராஜி-கதிரின் காதல் காட்சிகள்- கிளுகிளுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர் எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே பாண்டியன் கேட்க வில்லை. கோமதியின் மீது பயங்கரமாக கோபத்தில் இருந்தார். இன்னொரு பக்கம் செந்தில், தன்னுடைய அம்மாவை திட்டி விட்டு மீனாவை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் வந்த பின் செந்தில் ரொம்ப கடுமையாக பேசி இருந்தார். மீனா, நானும் அத்தையும் எந்த தவறும் செய்யவில்லை. அந்த சூழ்நிலை அப்படி இருந்தது என்று எடுத்து சொல்லி புரிய வைத்தார். இருந்தாலுமே செந்தில் கேட்கவில்லை.
இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த பாண்டியனிடம் கோமதி மன்னிப்பு கேட்டார். பாண்டியன், நான் உண்மையாக இருக்கிறேன். ஆனால், எனக்கு யாரும் உண்மையாக இருக்கவில்லை. உடைந்து போன உறவை ஒட்டி வைக்க முடியாது என்று திட்டிவிட்டு சென்றார். இதனால் கோமதி ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் ராஜி, தன்னால் தான் பிரச்சனை நடந்தது என்று வருத்தப்பட்டார்.
ராஜிக்கு, கதிர் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்றைய எபிசோட்டில் முத்துவேல் குடும்பத்தில் எல்லோருமே பாண்டியன் வீட்டிற்கு சாப்பிட்டு சென்ற போது எடுத்த புகைப்படத்தை ஸ்டேட்டஸில் வைத்திருந்தார்கள். அதை பார்த்த தங்கமயில் தங்கை, பாக்கியத்திடம் காண்பிக்கிறார். தங்கமயில் அதை பார்த்து ஷாக் ஆகிறார். பாக்கியம், பாண்டியன் குடும்பத்தை மோசமாக திட்டுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் தன்னிடம் பேசவில்லை என்று கோமதி ரொம்ப வருத்தமாக இருக்கிறார். கோமதியின் கையால் எது கொடுத்தாலுமே பாண்டியன் வாங்கிக் கொள்ளவில்லை.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் மீனா வேலைக்கு கிளம்புகிறார். லேட்டாக எழுந்த செந்தில் சண்டை வாங்குகிறார். மீனா, செந்திலிடம் சண்டை போட்டு விட்டு செல்கிறார். மீனாவை சந்தித்து பேசுவதற்காக தங்கமயில் வருகிறார். தங்கமயில், எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். என்னை இப்படி பண்ணி விட்டீர்களே? நியாயமா? என்று கேட்கிறார். மீனா கோபப்பட்டு பேசிவிட்டு தங்கமயில் சொல்ல வருவதை கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் கடையில் போன கோமதி, மன்னிப்பு கேட்டு பேசுகிறார். ஆனால், பாண்டியன் கோபத்தில் கோமதியை திட்டி விட்டு வெளியே போக சொல்கிறார்.
https://www.youtube.com/watch?v=XrdnDMrFGJI
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் கதிர்- ராஜி இருவரும் வெளியே போகிறார்கள். பின் போகும் வழியில் தூக்கம் வருகிறது என்று ராஜி, கதிர் மடி மீது படுத்து தூங்குகிறார். அதற்குப் பின் ஓட்டலில் இருவரும் தங்குகிறார்கள். அங்கு கதிர், ராஜியின் ஒவ்வொரு சைகையும் கண்டு ரசிக்கிறார். ராஜியும் கதிரை பார்த்து ரசிக்கிறார். அதற்குப்பின் ராஜி, கதிரிடையே ரொமான்ஸ் தொடங்குகிறது.