ராஜிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கதிர், வயிற்று எரிச்சலில் தங்கமயில்-சுகன்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 31/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், நீயும் உன் அப்பாவும் செய்த வேலையால் என்னுடைய மாமா தான் அவமானப்பட்டு நிற்கிறார். ஒழுங்கு மரியாதையாக உண்மையை வீட்டில் சொல். உன் அப்பா இனிமேல் கடைக்கு வரக்கூடாது என்றெல்லாம் சொல்கிறர். தங்கமயில் ஒன்றுமே தெரியாதது போல வாக்குவாதம் செய்கிறார். அதற்கு பின் தன் அம்மாவிற்கு போன் செய்த தங்கமயில், எதற்காக அப்பா பணத்தை எடுத்தார்.

தேவையில்லாத வேலை எல்லாம் செய்ய வேண்டாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு தங்கமயில் அம்மா, இனி யாருக்கும் தெரியாமல் திருட சொல்கிறேன் என்றெல்லாம் சொன்னார். இதையெல்லாம் சரவணன் கேட்டு விட்டார். பின் சரவணன், தங்கமயில் இருவருக்கும் இடையே சண்டை அதிகமானது. கடைசியில் சரவணன், எல்லா உண்மையும் வீட்டில் சொல்லப் போகிறேன் என்றார். உடனே தங்கமயில், துணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பாண்டியன், என்ன ஆனது என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

தங்கமயில், குழந்தை கலைந்ததிலிருந்து நான் பொய் சொல்கிறேன் என்றார். பணத்தை நானும் என் அப்பாவும் தான் எடுத்தோம் என்றெல்லாம் உங்கள் பையன் என் மீது வீண்பழி போட்டார். என்னால் இந்த வீட்டில் இனிமேல் இருக்க முடியாது என்று எல்லா பழியையும் சரவணன் பக்கம் திருப்பி விட்டார். உண்மை என்னவென்று தெரியாமல் கோமதி, பாண்டியன் இருவருமே சரவணனை திட்டி தங்கமயிலை உள்ளே போக சொன்னார்கள். பின் சரவணன், நீ இவ்வளவு மோசமானவள் என்று எனக்கு தெரியாது என்று தங்கமயிலை திட்டி விட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, கதிர் இருவருமே டிராவல்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர், பழனியை ட்ராவல்சை பார்த்துக்க சொல்லிவிட்டு ராஜியை அழைத்துக் கொண்டு வெளியே போகிறார். முதலில் துணி கடைக்கு சென்று ராஜிக்கு தேவையான துணிகளை எல்லாம் கதிர் வாங்கி தருகிறார். அதற்குப்பின் இருவரும் ஹோட்டலுக்கு போகிறார்கள். பின் தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்த கதிர், சாப்பாடு வேண்டாம் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

கோமதி, இருவரும் வெளியில் சென்று இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறார். பின் இதைப்பற்றி சுகன்யா கேள்வி கேட்கிறார். அதற்கு கோமதி, வெளியில் சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கட்டும் என்று சொல்கிறார். பின் சுகன்யா- தங்கமயில் இருவருமே பொறாமைப்பட்டு வயிறு எறிகிறார்கள். தங்க மயிலுக்கு ஆத்திரம் அடக்கவே முடியவில்லை. வார்த்தைகளால் சுகன்யாவிடம் கொட்டி விடுகிறார். அதற்குப்பின் ஷாப்பிங் எல்லாம் முடித்துவிட்டு கதிர்-ராஜி இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full