மனம் மாறிய ராஜியின் காதலை ஏற்றுக்கொள்வாரா கதிர்?பாண்டியனால் புலம்பும் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 5/2/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிர், ராஜியின் தேர்வுக்காக தான் சென்னை போகிறார். ஆனால், வீட்டில் கதிர் பொய் சொன்னார். இதனால் பாண்டியன்-கதிர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தான் அதிகமானது. இன்னொரு பக்கம் மீனா வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, தனக்கு தெரிந்த அதிகாரியின் மூலம் பிரச்சனையை முடிக்க பார்த்தார். மீனா, எதுவாக இருந்தாலும் சட்டப்படிதான் செய்வேன். என்னால் யாருக்கும் சலுகை செய்ய முடியாது என்று அதிகாரியை திட்டி விட்டார்.

இதனால் ராஜியின் சித்தப்பா மீனாவின் மீது கோபப்பட்டார். பின் கதிர் - ராஜி இருவருமே பாண்டியனிடம் சொல்லாமல் சென்னைக்கு கிளம்பி விட்டார்கள். இதனால் வீட்டில் என்ன கலவரம் வருமோ? என்ற பயத்தில் கோமதி இருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த பாண்டியன், கதிர்-ராஜி வீட்டில் இல்லாததை அறிந்து கோபப்பட்டார். அப்போது மீனா, ராஜி சித்தப்பா ஆஃபீஸ் வந்து மிரட்டியதை பாண்டியனிடம் சொன்னார்.
இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, பொய் சொல்லி போவதை நினைத்து வருத்தப்பட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உடனே கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லி சப்போர்ட்டாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் சக்தி, அவருடைய அப்பாவும் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது வந்த செந்தில், என் மனைவி இடம் தேவையில்லாமல் மிரட்டுவது, வம்பு இழுப்பது என்ற வேலையை வைத்துக் கொள்ளாதே என்று சொன்னார்.
கோபத்தில் சக்தி அப்பா கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். உடனே சக்தி, அவர்களிடம் எதற்கு வம்புக்கு செல்கிறீர்கள் அப்பா, அமைதியாக இருங்கள். அவர்கள் வேலையை செய்யட்டும் என்று பாண்டியன் குடும்பத்துக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:

இதைக் கேட்டு செந்தில் அமைதியாக போனார். பின் அரசியை திருமணம் செய்ய வேண்டும் என்றால் இப்படித்தான் பிராக்கெட் போட வேண்டும் என்று சக்தி சொன்னவுடன் அவர் அப்பாவும் ஏற்றுக்கொண்டார்.
நேற்று எபிசோட்டில் செந்தில், ராஜியின் சித்தப்பா வழியில் சண்டை வாங்கியதை பற்றி வீட்டில் சொன்னார். பின் அவருடைய மகன் சக்தி நமக்கு சப்போர்ட் செய்தான் என்றார். இதைக் கேட்டவுடன் அரசி, சக்தி தன்னிடம் பேசியதை நினைத்துப் பார்த்தார். அந்த சமயம் பார்த்து சக்தி வர, அவரை பார்த்தவுடன் அரசி உள்ளுக்குள் சிரித்தார். ஒருவரைக் ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் ராஜி தேர்வு எழுதி இருந்தார். அதன் பின் பாண்டியன், சரவணன் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது பாண்டியன், டூப்ளிகேட் சர்டிபிகேட்டை பற்றி கேட்க, என்ன சொல்வது என்று புரியாமல் பயத்தில் தயங்கி இருந்தார் தங்கமயில். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், சர்டிபிகேட்டை சீக்கிரம் ரெடி பண்ணி கொடு என்று கேட்க, தங்கமயில் பயத்தில் பதறி கொண்டே நிற்கிறார். உடனே மீனா, நாம் இருவரும் சென்று ரெடி பண்ணலாம் என்று சொன்னவுடன் தங்கமயில் சரி என்கிறார். பின் ரூமில் தங்கமயில், என்ன நடக்குமோ? என்று புரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ராஜி-கதிர் இருவரும் சாப்பிட போகிறார்கள். அது பெரிய ஹோட்டல் என்பதால் கதிர், தன்னிடம் பணம் குறைவாக இருப்பதால் ராஜிக்கு மட்டும் பிரியாணி வாங்கி தந்து, தான் குறைவாக சாப்பிடுகிறார். இதை பார்த்த ராஜி வருத்தப்படுகிறார். அதற்குப்பின் இருவரும் பீச்சுக்கு போகிறார்கள். அங்கு ராஜி எல்லா கவலையும் மறந்து சந்தோஷமாக விளையாடுகிறார். பின் கதிரிடம் அவரை பற்றி தெரிந்து கொள்ள கேட்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக கதிர் மீது ராஜிக்கு காதல் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full