முத்துவேல் வீட்டிற்கு சென்ற ராஜி, சக்திவேலின் தீராத வன்மம் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 20/1/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் குடும்பம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்கள். மீனா, ராஜியின் மீது கோமதி பயங்கரமாக கோபப்பட்டார். அந்த சமயம் பார்த்து
வீட்டிற்கு வந்த குழலி, பாக்கியம் குடும்பத்தை மோசமாக திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயில் போலீஸ் ஸ்டேஷனில் உண்மையை சொன்னதால் கோபப்பட்ட பாக்கியம் அவரை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். அதோடு வீட்டை விட்டு வெளியே போக சொல்லி தள்ளினார்.

தங்கமயிலின் பொருட்களை எல்லாம் கோமதி அனுப்பி வைத்தார். பாண்டியன் வீட்டில் இருந்து தன்னுடைய பொருள்கள் எல்லாம் வந்ததை பார்த்து தங்கமயில் உடைந்து போய் அழுதார். பாக்கியத்திற்கு கோபம் இன்னும் அதிகமானது. பின் சரவணன் ஆசையாக வாங்கி தந்த புடவையை பார்த்து தங்கமயில் ரொம்பவே கதறி அழுதார். குடும்பத்தினர் ஆறுதல் சொல்லி தங்கமயிலை உள்ளே அழைத்து சென்றார்கள். இன்னொரு பக்கம் கோமதி, தங்கமயில் செய்த வேலையை நினைத்து வீட்டில் உள்ள எல்லோரிடமும் புலம்பி கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது தங்கமயில் போன் செய்ய, கோமதி போன் நம்பரை பிளாக் லிஸ்ட் போட்டு விட்டார். தங்கமயில் விடாமல் எல்லோருக்குமே போன் செய்து கொண்டே இருந்தார். கோமதி எல்லோரையும் பிளாக் லிஸ்டில் போட சொன்னார். அதற்குப்பின் ராஜி, தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை பற்றி கோமதியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பழனி, அண்ணன்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கிறார்கள் என்றார். ராஜி, நான் வீட்டிற்கு போகட்டுமா? என்றார். பழனி, நீ போயிட்டு வா, எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றார். பின் ராஜி, தன்னுடைய அம்மா வீட்டிற்கு போனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, முத்துவேல் வீட்டிற்குள் செல்கிறார். ராஜியை பார்த்தவுடன் அப்பத்தா, மாரி, வடிவு எல்லோருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். அந்த சமயம் பார்த்து முத்துவேல்- சக்திவேல் இருவரும் வந்து விடுகிறார்கள். ராஜி, உங்களை பார்க்கணும் போல் இருந்தது. அதனால் தான் வந்தேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் போய் விடுகிறேன் என்று சொல்கிறார். முத்துவேல், நல்ல இருக்கியா? என்று விசாரிக்கிறார். இதை கேட்டு ராஜி ரொம்ப சந்தோசப்படுகிறார். முத்துவேல், ராஜி இங்க இருக்கணுமா? இல்லையா? என்று எதுவாக இருந்தாலும் நீங்க முடிவெடுத்துக் கொள் என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை எல்லாம் பார்த்து சக்திவேலுக்கு ரொம்ப கடுப்பாகிறது. பின் அப்பத்தா, ராஜி, வடிவு மாரி நான்கு பேரும் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குமாரிடம் சக்திவேல், ராஜு வீட்டிற்கு வந்ததை பற்றி சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். அவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது உதவியது உண்மைதான். ஆனால், அதற்காக அவர்கள் செய்த துரோகத்தை மறக்க முடியாது. எப்போதுமே ராஜி மீது கோபமாக இருக்கும் படி என் அண்ணனை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏதாவது செய்யணும் என்று மீண்டும் சதி திட்டம் போடுகிறார். பின் ராஜி, தன்னுடைய அம்மா வீட்டில் நடந்தது எல்லாம் கோமதி, மீனாவிடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார். தன் அண்ணன்களை வீட்டிற்கு வரவைக்க கோமதி, ராஜி நினைக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full