குமார் சொன்ன வார்த்தையில் கொந்தளித்த ராஜி, முத்துவேல் எடுக்க போகும் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் செந்தில் செய்த வேலையால் மீனா கோபமாக இருந்தார். அதனால் செந்தில் இடம் சரியாக மீனா பேசுவதில்லை. மீனா தன்னுடைய தந்தைக்கு போன் செய்து பணம் என்ன செய்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர், பணத்தை வேலை வாங்கி தருபவரிடம் கொடுத்துவிட்டேன் என்று சொன்னார். இதனால் தன்னுடன் வேலை செய்பவரிடம் மீனா, 10 லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கி தர முடியுமா? என்று கேட்க கேட்டார். அதற்கு அவருமே என்னால் முடிந்தவரை ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார்.
இன்னொரு பக்கம் தங்கமயில், பிரக்னன்சி கிட் வாங்கி செக் செய்து பார்த்தார். தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்து தங்கமயில் ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமே சொன்னார். பின் தங்கமயில் இந்த சந்தோஷமான விஷயத்தை சரவணன் இடம் சொல்ல போன் செய்தார். ஆனால், அவர் எடுக்கவில்லை. பின் தங்கமயில் மெசஜ் போட்டார். அதை பார்த்த சரவணன், இது புது ட்ராமாவா? ஒருவன் எத்தனை முறை ஏமாறுவது? என்று சொல்வதால் தங்கமயில் வருத்தப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் சரவணன் சொன்னதை நினைத்து தங்கமயில் ரொம்பவே கஷ்டப்பட்டார். உடனே தங்கமயில், நீ கிளம்பு நாம் எதுவாக இருந்தாலும் சம்மந்தியிடம் பேசிக் கொள்ளலாம் என்று பாண்டியன் வீட்டிற்கு சென்றார்கள். அப்போது தங்கமயில் அம்மா, இந்த வீட்டிற்கு வாரிசு வரப்போகிறது. தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னார். இதை கேட்டவுடன் பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். பின் சரவணனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வைத்தார்கள். ஆனால், சரவணன் அதை எதையுமே நம்பவில்லை.
நேற்று எபிசோட்:
பின் தனியாக ரூமிற்கு சென்று தங்கமயில் இடம் சரவணன், இதுவும் டிராமாவா? என் குடும்பத்தையே பொய் சொல்லி ஏமாற்றுகிறாயா? என்று சொன்னார். உடனே தங்கமயில், டெஸ்ட் பண்ண கிட்டை காண்பித்தார். அதை சரவணன், ஏதாவது ஸ்கெட்ச் வச்சு கோடு போட்டாரா என்று அலைத்துப் பார்க்கிறார். இதையெல்லாம் பார்த்து தங்கமயிலுக்கு ரொம்பவே கஷ்டமானது. பின் சரவணன், உண்மையாலுமே தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து அவரை சமாதானம் செய்தார். இருவருமே அப்பா- அம்மா ஆன சந்தோஷத்தில் இருந்தார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே ஸ்வீட் எடுத்து கொண்டாடினார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில்- சரவணன் இருவருமே ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தங்கமயில், உங்களுக்கு அப்பாவானது சந்தோசமாக இல்லையா? என்று கேட்கிறார். அதற்கு சரவணன், அப்பா ஆனதை நினைத்தால் எல்லோரும் சந்தோஷம்தான். இருந்தாலும் நீ சொல்வதில் எனக்கு சந்தேகம் தான் வருகிறது. என்னால் முன்பு போல் உன்னிடம் பழக முடியாது. என்னுடைய குழந்தைக்கு அப்பாவாக, குழந்தையின் அம்மாவிற்கும் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாப்பேன். ஆனால், பழையபடி நான் உன்னிடம் இருப்பேன் என்று மட்டும் நினைக்காதே. மீண்டும் நீ பொய் சொன்ன விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக உன்னை விட்டு நான் பிரிந்து விடுவேன் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதை கேட்டு தங்கமயில் ரொம்பவே மனமுடைந்து அழுகிறார். இன்னொரு பக்கம் ராஜி, குமார் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி, எதற்காக அரசியை கஷ்டப்படுத்துகிறார்? நானும் அந்த வீட்டில் வாழ்கிறேன். கொஞ்சம் கூட உனக்கு அக்கறை இல்லையா? என்று கேட்கிறார். உடனே குமார், ராஜியை திட்டி விட்டு அரசியை கஷ்டப்படுத்தினால் தான் பாண்டியன் குடும்பம் கஷ்டப்படும் என்று சொல்கிறார். இதனால் ராஜிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் ராஜி, தன்னுடைய அப்பாவை சந்தித்து குமார் செய்த விஷயத்தை பற்றி சொல்கிறார். ஆனால், அவர் அதைப் பற்றி பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. உடனே ராஜி, நீங்கள் எல்லாம் தெரிந்து நடந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அரசி வாழ்க்கையில் பிரச்சனை என்றால் என்னுடைய வாழ்க்கையிலும் தான் பிரச்சனை வரும். யோசித்து முடிவெடுங்கள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.