பெற்றெடுத்த தாயை வீட்டை விட்டு துரத்தும் சக்திவேல், கோமதி கொடுத்த பதிலடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல் அப்படியெல்லாம் இல்லை என்று எடுத்து சொல்லி புரிய வைத்தார். இருந்தாலும் பெண் வீட்டார் கேட்கவில்லை. கடைசியில் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். குமார் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் மீனா, சரவணன் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அஞ்சலி பற்றி மீனா விசாரித்தார். அதற்கு சரவணன், அவர் என்னுடைய தோழி. என் கஷ்டத்தை எல்லாம் சொல்ல ஆள் தேவை இல்லையா? அப்படி ஏதாவது என் வாழ்க்கையைப் பற்றி நான் யோசிக்க நினைத்தாலும் தவறு கிடையாது. மயில் செய்த தப்புக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்றும் இல்லை என்றார். இதனால் மீனா ஷாக்கில் இருந்தார்
கோமதி, தன்னுடைய உதவி இல்லாமல் பாண்டியன் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். மீனா, இப்படியே செய்யுங்கள் அப்போதுதான் மாமா உங்கள் அன்பை புரிந்து கொள்வார் என்றார். இன்னொரு பக்கம் தங்கமயில், வயதானவருக்கு தேவையான எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தார். அப்போது தங்கமயில், சரவணனுக்கு ஃபோன் செய்தார். சரவணன் கோபத்தில் தங்க மயிலை திட்டி விட்டு போனை வைத்து விட்டார். பின் தங்கமயிலுக்கு வாந்தி மயக்கமாக இருக்கிறது. அப்போது அந்த வயதான அம்மா, கர்ப்பமாக இருக்கிறாயா? என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
தங்க மயிலுக்கே ஒன்றும் புரியவில்லை. இன்னொரு பக்கம் சக்திவேல், திருமணத்தை நிறுத்த சொன்னது யார்? என்ற காரணத்தை கேட்டார். அவர் முதலில் தயங்கினாலும் சக்திவேல் கொஞ்சம் ஓவராக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட பெண் வீட்டார், உன்னுடைய அம்மா தான் திருமணத்தை நிறுத்த சொன்னார் என்றார். பின் வீட்டிற்கு வந்த சக்திவேல், ருத்ர தாண்டவம் ஆடினார். திருமணத்தை எதற்காக நிறுத்த சொன்னீர்கள் என்றெல்லாம் காந்திமதியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காந்திமதி, நான் தான் நிச்சயதார்த்த திருமணத்தை நிறுத்தினேன் என்று உண்மையை ஒத்துக் கொள்கிறார். இதனால் கொந்தளித்த சக்திவேல், எங்கள் வீட்டில் தின்னுட்டு எங்களுக்கு துரோகம் செய்கிறாயா, இனிமேல் நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லி காந்திமதியின் கையை பிடித்து தர தர தரவென்று இழுத்து வெளியே கொண்டு வந்து விடுகிறார்.
தன் அம்மா வீட்டில் ஏதோ சத்தம் கேட்கிறது என்று கோமதி வெளியே போனார்.
சீரியல் ட்ராக்:
அப்போது சக்திவேல், தன்னுடைய அம்மாவை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கோபப்பட்ட கோமதி, தன்னுடைய அண்ணனிடம் சண்டைக்கு போகிறார். சக்திவேல், பாண்டியன் குடும்பத்தையும் ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். ராஜி, பழனி, கதிர் எல்லோரும் சொல்லியுமே சக்திவேல் கேட்கவில்லை. காந்திமதியை வீட்டுக்குள் விட முடியாது என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். அப்போது கோமதி, தன்னுடைய அம்மாவை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். பாண்டியன் எதுவுமே சொல்லவில்லை. பின் காந்திமதி தன் பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருக்கிறார். அப்போது கோமதி, எதற்காக திருமணத்தை நிறுத்தினீர்கள்? என்று கேட்கிறார். காந்திமதியும் ஏதேதோ காரணத்தை சொல்லி விடுகிறார்.