குமாரை பொளந்து கட்டும் சக்திவேல், கல்லாவில் கை வைத்த மாணிக்கம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் முத்துவேல்-பாண்டியன் இரண்டு குடும்பம் சேர்ந்து காந்திமதியுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இதை பார்த்து காந்திமதிக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. அதற்குப்பின் காந்திமதி தன்னுடைய மகள் மருமகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவருமே போட்டோ சூட் செய்து கொண்டிருந்தார்கள். பின் பாண்டியன் தன்னுடைய உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
முத்துவேல், தன்னுடைய உறவினர்களுக்கு கறி விருந்து வைக்க அழைத்து வந்தார். ஆனால் பாண்டியன் குடும்பத்தினர் ஆர்டர் செய்த சாப்பாடு தான் வந்திருந்தது. அதை பார்த்து சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டார். முத்துவேல், சாப்பாடு என்னாது? ஏன் வரவில்லை? என்றார். பின் குமார், போன் செய்து சாப்பாடு ஆர்டர் எடுத்தவரிடம் விசாரித்தார். அந்த நபர், நான் ஏற்கனவே உங்களை வேறு ஒருவரிடம் சாப்பாடு ஆர்டர் கொடுக்க சொல்லிவிட்டேன் என்றார்கள். அப்போது தான் குமாருக்கு சாப்பாடு ஆர்டர் சொல்லாதது நியாபகம் வந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் குமார், நடந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்டார். கோபப்பட்ட முத்துவேல், குமாரை அடித்து விட்டார். பின் பாண்டியன் வீட்டில் எல்லோருமே சாப்பிட அழைத்தார்கள். கோபத்தில் சக்திவேல் கத்தினார். இருந்தாலுமே விடாமல் பாண்டியன் வீட்டில் இருப்பவர்கள் முத்துவேல் உறவினர்களை சாப்பிட அழைத்தார்கள். இதையெல்லாம் பார்த்து முத்துவேல், சக்திவேலுக்கு பயங்கர கோபம் வந்தது. அப்பத்தாவுமே தன் மகளுடன் சேர்ந்து சாப்பிட்டார். சொந்தக்காரர்கள், பாண்டியன் குடும்பத்தை ரொம்ப பெருமையாக பேசினார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். அதோடு கோவிலில் எடுத்த போட்டோவை எல்லாம் பிரேம் போட்டு வீட்டில் மாட்டுவதை பற்றி எல்லாம் தன்னுடைய மருமகள் இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த செந்தில், வீட்டிற்கு கிளம்பலாம் என்று சொன்னவுடன் மீனாவின் முகம் மாறுகிறது. கோமதி, செந்திலை திட்டுகிறார். இன்னொரு பக்கம் கறி விருந்து போட முடியாததால் உறவினர்கள் எல்லோருமே போன் செய்து கிண்டல் கேலி செய்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு முத்துவேல்- சக்திவேல் இருவருமே கோபப்பட்டு குமாரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
கோபத்தில் சக்திவேல், குமாரை அடிக்கிறார். அப்போது வந்த காந்திமதி, நடந்தது பற்றி பேசிக்கொண்டிருந்தால் என்ன ஆகப்போகுது? அடுத்த வேலையைப் பற்றி பாருங்கள் என்று சொல்கிறார். உடனே சக்திவேல், உன் மகள் வந்ததால் சந்தோஷமா? என்றெல்லாம் கேட்டு மீண்டும் வம்பு இழுக்கிறார். இதனால் காந்திமதி, சக்திவேலை திட்டி விட்ட அங்கிருந்து செல்கிறார். இன்னொரு பக்கம் கடையில்
மாணிக்கம், யாரும் இல்லாத நேரம் பார்த்து கல்லாவில் உள்ள காசை மாணிக்கம் எடுத்து விடுகிறார். இதை பார்த்த சரவணன், தங்கமயிலிடம் சொல்லி சண்டை போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.